பஞ்சு போல இட்லி வேண்டுமா? இந்த ஒரு நீரை சேர்த்து பாருங்க!
இட்லி நமது காலை உணவில் மிகவும் முக்கியமாக இடம்பெறும் ஒரு உணவாகும். இதற்கு கட்டாயமாக அரிசி ஊழுந்து தேவைப்படும். இதை வைத்து தான் பாரம்பரியமாக மக்கள் தொண்டு தொட்ட காலம் இருந்து இட்லி செய்து வருகின்றனர்.
பொதுவாக இது தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். இந்த இட்லி உணவை சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையான உணவாக இருக்கும்.இதை பல வகையாகவும் செய்யலாம்.
இந்த இட்லிலை மிருதுவாகவும் தென்மையான பஞசு போலவும் செய்ய ஆசைப்படுவார்கள். இதற்கு என்னென்ன செய்யலாம் என்பதை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
தேவையான பொருட்கள்
- அரிசி – 2 கப்
- உளுந்து – அரை கப்
- வெந்தயம் – அரை ஸ்பூன்
- இளநீர் தண்ணீர் – ஒரு டம்ளர்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம் என அனைத்தையும் 4 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பின்னர் ஊறிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தனித்தனியாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
அரைத்து எடுத்த அனைத்து மாவு அனைத்தையும், உப்பு சேர்த்து கலந்து புளிக்க வைக்கவேண்டும். தண்ணீர் அதிகம் சேர்க்காமல் மாவை கெட்டியாகவே கரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
புளித்த மாவில் ஒரு டம்ளர் இளநீர் தண்ணீரை சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து ஒரு மணி நேரம் ஊறவிடவேண்டும். பின்னர் எடுத்து இட்லி பாத்திரத்தில் சேர்த்து இட்லிகளாக வார்த்து எடுத்தால் இளநீர் இட்லி தயார். இது மிகவும் மிருதுவாகவும், சுவையானதாகவும் இருக்கும்.
இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். மிகவும் ஆரோக்கியமானதாகவும் சவையானதாகவும் இருக்கும். இதை சட்னி சாம்பார் என உங்களுக்கு பிடித்தவாறு சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |