5 பழம் இருந்தாவே போதும்.. சூப்பரான மங்களூர் வாழைப்பழ அல்வா செய்யலாம்- ரெசிபி தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக இனிப்புகள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
கடைகளில் வாங்கி சாப்பிடும் இனிப்புகளை விட வீடுகளில் செய்து சாப்பிடும் இனிப்புகள் ஆரோக்கியமானதாகவும், கலப்படம் இல்லாததாகவும் இருக்கும்.
இதன்படி, மக்களுக்கு அதிகம் பிடிக்கும் இனிப்புகளுள் அல்வாவும் ஒன்று. இந்தியாவில் உள்ள இடங்களில் ஒன்றான திருநெல்வேலி, அல்வாவிற்கு பிரபலமான இடமாக பார்க்கப்படுகின்றது.
வீடுகளில் பண்டிகை காலங்களில் வாங்கிய வாழைப்பழங்கள் அதிகமாக இருந்தால் அதனை வைத்து சூப்பரான அல்வா செய்யலாம். இப்படி செய்யும் அல்வாக்கள் தனித்துவமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும்.
அந்த வகையில், வெறும் 5 வாழைப்பழங்களை வைத்து எப்படி சுவையான கேரளா வாழைப்பழ அல்வா இலகுவாக செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வாழைப்பழ அல்வா
தேவையானப் பொருட்கள்:
- வாழைப்பழங்கள் - 5(நன்கு பழுத்த பழம் சிறந்தது)
- நெய் - ¼ கப்
- சர்க்கரை - ½ கப்
- முந்திரி - ¼ கப்
- ஏலக்காய் தூள் - ¼ ஸ்பூன்
அல்வா செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில், வாழைப்பழங்களை நறுக்கி போட்டு பேஸ்ட் போன்று அரைத்து எடுக்கவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய்யை ஊற்றி நெய் காய்ந்ததும் அதில் அரைத்து வைத்த வாழைப்பழத்தை போட்டு சரியாக 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கிளறவும்.
கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் நிறம் மாறத்தொடங்கும். அப்போது அதில் தேவையான அளவு சர்க்கரை மற்றும் முந்திரி சேர்த்து நன்கு கிளறவும்.
இப்போது அல்வாவின் நிறம் முற்றிலும் மாறிவிடும். அத்துடன் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறினால் மணம் வர ஆரம்பிக்கும். சர்க்கரை கொட்டிய 20 நிமிடத்தில் அல்வா நன்கு கெட்டியாகவும், பாத்திரத்தில் ஒட்டாத தன்மையுடனும் மாறி விடும்.
அப்படி வந்தவுடன் அல்வாவை நெய் தடவிய ஒரு தட்டுக்கு மாற்றி நன்கு பரப்பி விடவும்.
அல்வா ஆறியதும் அதனை நாம் விரும்பி வடிவத்திற்கு வெட்டி வீட்டிலுள்ளவர்களுக்கு தேநீருடன் பரிமாறலாம். இப்படி செய்தால் சுவையான கேரளா வாழைப்பழ அல்வா தயார்!
[BNMHPB
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |