இடை விடாத பிரச்சினைக்கு இதுவும் ஒரு காரணமா? வாஸ்து சாஸ்த்திரத்தில் மறைக்கப்பட்ட ரகசியங்கள்
பொதுவாக சில வீடுகளில் அடிக்கடி பணப்பிரச்சினைகள், ஆரோக்கிய குறைப்பாடுகள் வந்து கொண்டே இருக்கும். இதற்கு மற்ற காரணங்களை விட வாஸ்துவை கொஞ்சம் சரிப்பார்க்கலாம்.
ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் செல்வம், செழிப்பு ஆகிய இரண்டு இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் எல்லா வீடுகளிலும் இது சாத்தியம் இல்லை.
சில வீடுகளில் எவ்வளவு உழைத்தாலும் காசு மிச்சமில்லாமல் போகலாம்? அதற்கு என்ன செய்வது என தெரியாமல் புலம்பலாம்? இது போன்ற நேரங்களில் வாஸ்துவை சரி பார்ப்பது சிறந்தது.
அந்த வகையில் வீட்டிலுள்ள செல்வத்தை பெருக்க, என்னென்ன வாஸ்துக்களை சரி செய்ய வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வாஸ்து டிப்ஸ்
1. பொதுவாக வீட்டில் ஒவ்வொரு இடத்திற்கும் அதன் வாஸ்து குறிப்புகள் வேறுப்படும். அதன்படி நாம் வீட்டையும் அதில் வைக்கப்படும் பொருட்களையும் ஒழுங்கு செய்வது சிறந்தது.
2. ஒரு வீட்டை கட்டும் போது அதன் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் கதவு வைக்க வேண்டும். அத்துடன் இந்த திசையில் அழுக்கு, இருள், துர்நாற்றம் மற்றும் கனமான பொருட்கள் இருக்கக்கூடாது. இந்த முறையை சரியாக கைப்பிடிப்பதன் மூலம் வீட்டில் வரும் கஷ்டங்களை கட்டுபடுத்தும்.
3. உங்கள் வீட்டில் சித்திர அறை வைக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தால் வடமேற்கு திசையில் வைக்கலாம். சித்திர அறையை இந்த திசையில் வைக்க முடியாவிட்டால் திட்டத்தை கை விடுவது அதிலும் சிறந்தது.
4. வீட்டின் மையத்தை பிரம்ம ஸ்தானம் என அழைப்பார்கள். இந்த இடத்தில் டைனிங், சோபா, கட்டில் போன்ற பாரமான தளபாடங்களை வைப்பது கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |