ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு எச்சரிக்கை: இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
எல்லோருக்குமே ஐஸ்கிரீம் என்பது பிடித்ததொன்று தான். சிறியவர் முதல் பெரியவர் கேட்டு கேட்டு சாப்பிட்டு அடிமையாகி விடுவார்கள்.
பொதுவாக கோடைக்காலத்தில் வெயிலை சமாளிக்க இந்த ஐஸ்கிரீம் பெரிதும் உதவுகிறது. ஐஸ்கிரீமில் ஏராளமான வெரைட்டிகளும், சுவைகளும் காணப்படுகிறது.
ஐஸ்கிரீமானது எல்லோருக்கும் ஒரு எனர்ஜி பூஸ்டராகத் தான் இருக்கிறது. இதில் இருக்கும் சக்கரைக் கூட உங்களை சுறுசுறுப்பாக்குகிறது. ஆனால், பல நன்மைகளை இந்தாலும் அதில் ஏதாவது ஒரு தீமை இருக்கத்தான் செய்கிறது.
ஐஸ்கிரீமில் இப்படியொரு ஆபத்தா?
ஐஸ்கிரீம் தயாரிப்பதற்காக பல வேதிப்பொருட்கள் சேர்க்கின்றனர். அந்த வேதிப்பொருட்கள் பல உங்களுக்கு ஆபத்துக்களை கொண்டு வரக்கூடியது.
மேலும், ஐஸ்கிரீம் உருகாமல் இருப்பதற்கு Polysorbate 80எனும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் சவர்க்காரங்களிலும், ஷாம்புகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப் பொருள் ஆகும்.
ஐஸ்கிரீமில் சேர்க்கப்பட்டுள்ள பால் கெட்டுப்போகாமல் இருக்க சோடியம் பென்சோயேட் எனும் கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. இந்த சோடியம் பென்சோயேட் கெமிக்கல் வாயில் வைத்தவுடன் ஐஸ்கிரீம் கரைவதற்கு காரணமாக இருக்கிறது.
இதுதான் ஐஸ்கிரீமின் சுவையை அதிகமாக்கி திரும்ப திரும்ப சாப்பிடும் ஆர்வத்தைக் கூட்டுகிறது.
சிலர் முட்டைக்கு பதிலாக பெயின்ட் ரிமுவராக பயன்படுத்தப்படும் டை எய்தலின், க்லைகோன் எனப்படும் இரண்டு கெமிக்கலும் சிறுநீரகப் பிரச்சினையையும், கல்லீரல் பிரச்சினையையும் ஏற்படுத்தும்.
இது அல்சர், புற்றுநோய், இதயவலி போன்ற நோய்களை உருக்கும் அபாயம் கொண்டது.
பொட்டாசியம் கார்பைட் மற்றும் செயற்கை நிறங்கள் சக்கரையுடன் சேர்ந்து கெட்டியாக்கி சேர்க்கப்படுகிறது இது உடலுக்கு தீங்கு உண்டாக்கக் கூடியது.