இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: முதலீடு செய்ய சரியான நேரமாம்
கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கண்டு வருகிறோம். எனினும், வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள்.
உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 56 அதிகரித்து ரூ. 4,864-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம், ரூ. 448 உயர்ந்து 38,912-க்கு விற்பனையில் உள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 3,984 ஆக விற்கப்பட்டு வருகிறது.
நிறத்தால் நிராகரிக்கப்பட்ட பிரபல நடிகை! அடையாளம் தெரியாமல் ஸ்டைலாக மாறிய புகைப்படம்
வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி 68.30 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 68,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,000-5,000 டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோரது ஆர்வத்தை இது அதிகரித்துள்ளது.
தினமும் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? அதிசயத்தை காணலாம்