கோடையில் உடல் குளுகுளுவென இருக்க வேண்டுமா? அருமையான 'நுங்கு சர்பத்'..
கோடை காலத்தில் உடம்பை குளிர்ச்சியாக வைப்பதற்கு நுங்கு ஒரு அருமையான உணவு பொருளாகும். தற்போது நுங்கு சர்பத் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்
நுங்கு
ஆங்கிலத்தில் ஐஸ் ஆப்பிள் என்று அழைக்கப்படும் நுங்கு தென்னிந்தியாவில் பெரும்பாலான மக்கள் சாப்பிடும் பழமாகும். உடலை குளிர்ச்சியாக்கும் நுங்கில் கார்போஹைட்ரேட், பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
குறைந்த கலோரிகள் காணப்படுவதுடன், நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்கள் சி, ஏ, ஈ மற்றும் கே ஆகியவை உள்ளன. மேலும் இதில் இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளன.
நுங்கு நன்மைகள்:
கோடையில் ஏற்படும் நீரிழப்பை தடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அளித்து கோடையில் ஏற்படும் நோயிலிருந்து பாதுகாக்கின்றது.
மலச்சிக்கல், வீக்கம் மற்றும் குமட்டல் வயிற்று பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு நுங்கு மிக அருமையான பழமாகும்.
நுங்கில் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இதே வயதான செயல்முறையை தாமதப்படுத்த பெரிதும் உதவுகிறது.
குறைந்த கலோரி கொண்ட நுங்கு சாப்பிடுவதால் உடல் எடையை குறையும். தோல் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க செய்யும்.
நுங்கில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது கல்லீரலை சேதத்தில் இருந்து பாதுகாக்கவும், அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. தற்போது நுங்கு சர்பத் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை - 1/2
நன்னாரி சிரப் - 3 ஸ்பூன்
நுங்கு - 1/4 கப்
பனிக்கட்டி - 1/4
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
நுங்கு சர்பத் செய்ய முதலில் நுங்கை நன்றாக பிசைந்து கொள்ளவும். ஒருவேளை உங்களால் மென்மையாக பிசைய முடியவில்லை என்றால், அதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு முறை அரைத்து எடுக்க வேண்டும்.
இப்போது ஒரு கண்ணாடி கிளாஸில் நொறுக்கப்பட்ட ஐஸ் கட்டிகள், அதில் தொடர்ந்து நுங்கு, நன்னாரி, சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்தால் சுவையான நுங்கு சர்பத் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |