ரவி- ஆர்த்தி விடயத்தில் கெனிஷாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்: நான் சரணடைகிறேன்...கெனிஷாவின் வைரல் பதிவு!
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்துக்கு காரணமானவர் என அறியப்படும் கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷா தற்போதுத தனக்கு வந்த எதிர்மறை கமெண்டுகளையெல்லாம் பதிவிட்டு நான் சரணடைகிறேன் என வெளியிட்டுள்ள பதிவுகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நடிகர் ரவி மோகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
இதற்கிடையே இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் ஆர்த்தி தனது கடைசி அறிக்கை என்று கூறி மிகப்பெரிய அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இதில் தனது வாழ்க்கையில் மூன்றாவதாக வந்த நபர் தான் இந்த பிரிவிற்கு காரணம் என்றும், ரவி மோகன் செல்லும் போது விலையுயர்ந்த கார் முதற்கொண்டு அனைத்தையும் எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டு நேரடியாகவே பாடகி கெனிஷாவை தாக்கியிருந்தார்.
அதனைடுத்து கெனிஷா தனக்கு சாதகமாக போசியவர்கள் குறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் போட்டிருந்த பதிவுகளையெல்லாம் நீக்கினார்.
அதனை தொடந்து தற்போது தனக்கு வந்த எதிர்மறை கமெண்டுகளையெல்லாம் பதிவிட்டு நான் சரணடைகிறேன் என பதிவிட்டுள்ளார். குறித்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




