இஸ்லாமியர்கள் என்பதால் பிடிக்கவில்லையா? கண் முன்பு அரங்கேறிய அவலம்! உடைந்து போய் கண்ணீர் விட்டு கதறும் சிறுமி
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயான யுத்தத்தில் எங்க எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது என காசாவை சேர்ந்த 10-வயது சிறுமி கண்ணீர் வடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல் மே-15-ம் தேதியில் இருந்து இதுவரை 149 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் 6மாத குழந்தையில் இருந்து 17 வயது சிறார் என 41 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து சிறுமி ஒருவர் கண்ணீர் வடிக்கும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நாடின் அப்தெல் தைஃப் (Nadine Abdel-Taif) எனும் 10 வயது சிறுமி ‘நான் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறேன்... என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.. எனக்கு 10 வயதுதான் ஆகிறது’ என அந்த வீடியோவில் கண்ணீர் வடிக்கிறார்.
"I don't know what to do."
— Middle East Eye (@MiddleEastEye) May 15, 2021
A 10-year-old Palestinian girl breaks down while talking to MEE after Israeli air strikes destroyed her neighbour's house, killing 8 children and 2 women#Gaza #Palestine #Israel pic.twitter.com/PWXsS032F5
“நான் எப்போதும் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறேன். ஏன் என்று எனக்கு தெரியவில்லை. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என ஆதங்கம் தெரிவிக்கிறார்.
இஸ்ரேல் பொழிந்த குண்டு மழையால் தரைமட்டமான கட்டங்களை காண்பித்து நீங்கள் இதையெல்லாம் பாருங்கள். இதில் நான் என்ன செய்ய முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்புகிறார். நாங்கள் இதற்கு என்ன செய்யப்போகிறோம்.
அவர்கள் நம்மை வெறுப்பதாக என்னுடைய குடும்பத்தினர் கூறுகிறார்கள். நாம் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களுக்கு நம்மை பிடிக்கவில்லை என்கிறார்கள்.
இங்கு பாருங்குள் என்னைச் சுற்றி குழந்தைகள் இருக்கிறார்கள். நாங்கள் எல்லாம் குழந்தைகள். ஏன் எங்களை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி எங்களை கொலை செய்கிறீர்கள்.” என அச்சிறுமி உடைந்து அழுகிறார்.