இரத்த அழுத்தத்தை விரட்டியடிக்கும் பானங்கள்.. தினமும் குடிக்கலாமா?
பொதுவாக நாம் அன்றாடம் குடிக்கின்ற சில பானங்கள் தொடர்ந்து குடிப்பதால் த்த அழுத்தம் குறைவதோடு நமது இதய நலனும் மேம்படுகிறது.
இவ்வாறு தயாரிக்கப்படும் பானங்களில் எந்தவித செயற்கை பொருளையும் கலக்காமல் தயாரிக்க வேண்டும்.
ஏதாவது பிரச்சினையின் போது ஹைப்பர் டென்சனை குறைக்க மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்வோம்.
ஆனால் மருந்து மாத்திரை இல்லாமல் இயற்கையான டயட்டை பின்பற்றியும் மன அழுத்தம் பிரச்சினையை கட்டுக்குள் வைக்கலாம்.
அந்த வகையில் இரத்த அழுத்தம் பிரச்சினையை ஓட விடும் பானங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
இரத்த அழுத்தத்தை குறைக்கும் பானங்கள்
1. நாம் டயட்டிற்காக எடுத்து கொள்ளும் க்ரீன் டீயில் கேடீசின்ஸ் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முடியும்.
2. பொதுவாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும இஞ்சியை சாதாரண டீயுடன் கொதிக்க விட்டு குடிக்கும் பொழுது இரத்த அழுத்தம் கட்டுபடுத்தப்படுவதுடன் உடல் ஆரோக்கியமும் மேம்படுத்தப்படுகின்றது.
3. டீயில் அதிக சத்துக்கள் நிறைந்த டீ என்றால் அது செம்பருத்தி பூ டீ தான். ஏனெனின் செம்பருத்தி டீ அந்தோசைனின்ஸ் மற்றும் ஃப்ளாவோனாய்ட் கலவைகள் இருக்கின்றன. இது ஹைப்பர் டென்சனை குறைத்து ஆரோக்கியமாக வாழ உதவி செய்கின்றது.பூவை 5-10 நிமிடங்கள் ஊற வைத்து டீ தயாரிக்கவும்.
4. தமிழர்களில் அதிகமாக சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் வெந்தயமும் ஒன்று. இதில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் இரத்த அழுத்தம், எடை குறைப்பு இப்படி பல வேலைகளை செய்கின்றது. இரத்த அழுத்த பிரச்சினையுள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
5. மாதுளை ஜூஸில் அதிகளவு ஆண்டி ஆக்ஸிடெண்டும் பாலிபீனாலும் உள்ளது. மாதுளை ஜூஸை குடிப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |