2023ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்! அதுவும் ஹைபிரிட் கிரகமாம்....
2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் மாதம் 20ம் தேதியும், மற்றொரு கிரகணம் அக்டோபர் 14ம் தேதியும் நிகழ உள்ளது.
சூரிய கிரகணம்
2023ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20ம் தேதி காலை 7:04 மணி முதல் மதியம் 12:29 மணி வரை காணலாம்.
இந்த சூரிய கிரகணம் ‘நிங்கலூ சூரிய கிரகணம்’ அல்லது ‘ஹைபிரிட் சூரிய கிரகணம்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் நேரடியாகப் பார்க்க முடியாது என்றாலும் மற்ற நாடுகளில் நேரடி ஒளிபரப்பு மூலம் பார்க்க முடியுமாம்.
ஹைபிரிட் சூரிய கிரகணம் என்றால் என்ன?
ஹைபிரிட் சூரிய கிரகணம் ஒரு வளைய கிரகணம் மற்றும் முழு சூரிய கிரகணம் ஆகியவை ஒன்றிணையும் நிகழ்வு ஆகும்.
சந்திரனின் நிழல் பூமி மீது முழுவதும் விழுந்து நகர்ந்து, மற்றொன்றுக்கு மாறுகிறது. இந்த அரிய கிரகணத்தின்போது, சூரியன் சில நொடிகளுக்கு ஒரு வளையம் போன்ற வடிவத்தில் காட்சி அளிக்கும். அது 'நெருப்பு வளையம்' என்று அழைக்கப்படுகிறது.
சூரிய கிரகணம் எப்படி?
பொதுவாக நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் சில நொடிகள் தெரியும்.
இதற்கிடையில், முழு கிரகணம் எக்ஸ்மவுத், மேற்கு ஆஸ்திரேலியா, திமோர் லெஸ்டே மற்றும் மேற்கு பப்புவா ஆகிய பகுதிகளில் மட்டும் இந்த கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடியும்.
பாதுகாப்பாக பார்ப்பது எப்படி?
சூரிய கிரகணத்தின்போது சூரியனை நேரடியாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும். எனவே சூரிய ஒளியைப் பார்ப்பதற்கு சிறப்பு கண் பாதுகாப்பு அவசியம் என்று பரிந்துரைக்கிறது.
கருப்பு பாலிமர் கண்ணாடி, அலுமினிய மைலார் கண்ணாடி, 14ஆம் எண் வெல்டிங் கண்ணாடி உள்ளிட்ட கண்ணாடிகளை கிரகணத்தைப் பார்க்க பயன்படுத்தப்படலாம்.