எறும்புத் தொல்லை தாங்க முடியலையா? இந்த ஒரே ஒரு பொருள் போதும்.... அடித்து விரட்டலாம்
பொதுவாக சமையல் அறையில் இருக்கும் பெரிய பிரச்சினை எந்த உணவுப் பொருளை வைத்தாலும் எறும்புகள் படையெடுத்து வர ஆரம்பித்து விடும்.
நம்முடைய வீட்டிலுள்ள சில எளிய பொருட்களைக் கொண்டு எப்படி வீட்டில் எறும்புத் தொல்லையை விரட்டலாம் என அறிவோம்.
லிக்யூட் டிடர்ஜெண்ட்
கண்ணாடி க்ளீன்சர் மற்றும் பாத்திரம் கழுவும் லிக்யூட் சோப்பு இவற்றை ஒன்றாக கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த சோப்பு தண்ணீரை எறும்பு வரும் இடங்களில் தெளியுங்கள். சோப்பின் நெடிய மணத்திற்கு எறும்புகள் தாங்காது. எறும்புகள் ஓடி விடும்.
எறும்புகள் முற்றிலுமாக போன பிறகு அந்த இடத்தை துடைத்து எடுங்கள்.
மிளகுத்தூள்
எறும்புகளுக்கு மிளகுத்தூளின் வாசனை எரிச்சலூட்டக் கூடியது. எனவே எறும்பு வரும் இடங்களில் மிளகுத் தூளை தூவி வைக்கலாம். மிளகின் காரமான மணமே எறும்புத் தொல்லையை விரட்டி விடும்.
காபி பொடி
காபி பொடி வாசனையும் எறும்புகளை விரட்டி விடும். எனவே எறும்புகள் நடமாடும் இடங்களில் காபி பொடியை தூவி விடலாம். பிறகு எறும்புகள் அந்த பக்கம் கூட வராது.