கணவனின் தொல்லையால் மாமியார் வீட்டில் உறங்கிய மனைவி.. காலையில் அவர்கண்ட அதிர்ச்சி காட்சி!
மனைவி மாமியார் வீட்டில் படுத்து உறங்கியதால், கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி பகுதியில் வசிப்பவர் சின்னமணி. இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு பட்டு ராஜா என்ற மகனும் உள்ளார்.
இவரின் மனைவியான தங்கம் கடந்த சில ஆண்டுகளாகவே பட்டு ராஜாவின் மது குடிக்கும் பழக்கம் காரணமாக அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இவ்வாறு பட்டுராஜா மது குடித்துவிட்டு தனது மனைவியான தங்கத்திடம் சம்பவ தினத்தின் போதும் தகராறு செய்துள்ளார்.
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத தங்கம் பக்கத்தில் வசிக்கும் தனது மாமியார் வீட்டிற்கு சென்று படுத்துக் கொண்டார். இந்நிலையில், தங்கம் காலையில் எழுந்து வீட்டிற்குச் சென்று பார்த்தபோது தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார்.
இவரின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பட்டு ராஜாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.