மனைவியுடன் உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?
திருமணமான தம்பதிகள் அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள். ஆரம்பத்தில், நெருக்கமாக உள்ள இவர்கள் காலபோக்கில் எலியும், பூனையுமாக மாறிவிடுவார்கள்.
இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காததும், உறவில் விரிசல் ஏற்படுவதும் தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மனைவியிடம் அன்பாக பழகுங்கள்
முதல் வழியாக மனைவியை மகிழ்விக்க நேர்மறையான விஷயங்களை அவரிடம் பேசுங்கள், நகைச்சுவையாக இருங்கள். அவர்களின் பேச்சுக்கு மரியாதை கொடுங்கள்.
அடுத்ததாக, மனைவியின் மனநிலை சோர்வுடனோ அல்லது சலிப்புடனோ இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி எடுங்கள்.

அவருடன் சேர்ந்து சிறிய சிறிய வேலைக்கு நீங்கள் பக்கபலமாக இருக்கலாம். மனைவியின் ஆடை அலங்காரத்தை எப்போதுமே பாராட்டுங்கள். அதனை மிகவும் எதிர்ப்பார்ப்பார்கள்.
அதிலும் குறிப்பாக பொது இடங்களுக்கு செல்லும் போது தன்னுடைய ஆடை எப்படி உள்ளது என்று கணவர் கருத்து கூற வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள்.
முக்கியமாக மனைவியிடம் பொய் பேசுவதை முடிந்த அளவு தவிர்த்துவிடுங்கள். அது அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்து விடும்.
எந்த சூழலிலும் அவரிடம் உண்மையை பேசி உங்கள் மதிப்பை உயர்த்திக்கொள்ளுங்கள். மனைவி ஏதாவது தவறு செய்தால் அதை மனம் நோகாமல் சுட்டிக்காட்டுங்கள்.

தாம்பத்தியதில் அன்பாக இருங்கள்
முக்கியமாக கணவன் மனைவி தாம்பத்தியத்தை பற்றி பேசுகையில் வாக்குவாதம் உண்டாகலாம்.
அப்போது மனைவிக்கு பிடிக்காததை பற்றி பேசாமல் விட்டுவிடுவது நல்லது. அவர்களின் பிடித்தமான நேரத்தின் போது விருப்பத்துடன் தம்பத்தியம் வைத்துக்கொள்ளுங்கள்.
அதே தான் முக்கியம் என ஒரு போதும் காட்டிவிடாதீர்கள். மனைவி செய்யும் வீட்டு வேலைகளில் குறை கண்டுபிடிப்பதையே வாடிக்கையாக கொள்ளக்கூடாது.
தவறு இருக்கும் பட்சத்தில் அவருடன் சேர்ந்து அந்த தவறை திருத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.
கணவன் மனைவி இடையே எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அன்றே பேசி மறந்துவிட்டு அன்பாக இருப்பதே வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாக்கும்.