வீட்டில் ஐந்து பெண்கள், ஒரே கணவர் – நெட்டிசன்கள் குழம்பும் காட்சி
ஒரே வீட்டில் ஐந்து மனைவிகளுடன் சந்தோஷமாக வாழும் ஒருவரை பற்றிய வீடியோ இன்ஸ்டாகிராமில் 27.7 மில்லியன் பார்வைகள் பெற்று வைரலாகி வருகிறது.
ஐந்து மனைவிகளுக்கு ஒரு கணவர்
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், ஒரே வீட்டில் ஐந்து பெண்களுடன் வாழும் ஒருவரின் வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெஸ், கேபி, டயானா, கேம், ஸ்டார் என இவர்களுடன் வீட்டுப் பணிகளை பகிர்ந்து கொண்டு, நெருக்கமான உறவுகளில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன.
வீடியோவில், கணவர் வீடு திரும்பும்போது பெண்கள் அவரை வரவேற்கும் விதம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இது பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டதாக இருந்தாலும், இவ்வீடியோ தற்போது 27.7 மில்லியன் பார்வைகள் பெற்று வைரலாகியுள்ளது.
இது தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளன. சிலர் இதனை "வாழ்க்கையை சிரிப்போடு கொண்டாடும் விதம்" என பாராட்ட, மற்றவர்கள் "இது உறவுகள் மீதான பொய்படமூட்டம்" என விமர்சிக்கின்றனர்.
இந்த நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெளிவாகத் தெரியவில்லை, எனினும் இவரது வாழ்க்கை முறை வியப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
வீடியோ காண விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |