அழகாக இருந்த மனைவி... தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த கணவர்
மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், அவரை கொலை செய்துவிட்டு தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முத்திரை பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு. பால் வியபாரம் செய்து வரும் இவருக்கு, ரதிகலா(45) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
தன் மனைவி அழகாக இருப்பதால் அவர் தன்னை விரும்பவில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மையில், மனைவி நடத்தையில் சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரதிகலா நடத்தையில் பாபுக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பாபு, ரதிகலாவின் தலையில் கிரைண்டர் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தப்பிஓடியுள்ளார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ரதிகலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் ரதிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த ரதிகலாவின் கணவர் பாபுவை கைது செய்த போலிசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.