திருமணத் திகதியை மறந்த கணவன் வைத்தியசாலையில் அனுமதி: அதிரடியாக கைது செய்யப்பட்ட மனைவி! என்ன நடந்தது தெரியுமா?
திருமண நாளை மறந்த கணவனை தாக்கிய மனைவியை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணநாளை மறந்த கணவன்
மும்பையின் காத்கோபர் பகுதியைச் சேர்ந்தவர் விஷால் நாங்க்ரே (32). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்பனா (27) என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதில் விஷால் தபால் நிலையத்தில் தொழில் புரிந்து வருகிறார், கல்பனா ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்களுக்கு திருமணமாகி 5ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி திருமண நாள் வந்துள்ளது.
இந்த திருமண நாளை கணவன் விஷால் மறந்து விடவே ஆத்திரமடைந்த மனைவி கணவனுடன் பலமுறை சண்டைப்போட்டுள்ளார். சண்டை வாக்குவாத்தில் முடியவே கணவன் இந்த சண்டையை பெரிதாக்கமால் மனைவியை சமாதானப்படுத்தி வந்துள்ளார்.
ஆனால், இந்தப் பிரச்சினை இப்படி பூதாகரமாக வெடிக்கும் என நினைக்காத கணவனுக்கு அடுத்த நாள் காலை வேலைக்கு சென்று வீட்டுக்கு வந்ததும் தனது மோட்டார் சைக்கிளை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது விஷாலின் மனைவி கல்பனாவும் வேலை முடித்து வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அப்போதும் கல்பனா விஷாலுடன் சண்டைப்பிடித்துள்ளார். பின்னர் கல்பனா தனது பெற்றோர் மற்றும் சகோதரனுக்கு போன் செய்து வீட்டில் நடக்கும் சண்டைப் பற்றி கூறியிருக்கிறார்.
தகவலைக் கேட்டு வீட்டிற்கு விரைந்த வந்த கல்பனாவில் குடும்பத்தினர் விஷாலை அடித்து உதைத்து அவரின் இருசக்கர வாகனத்தையும் அடித்து உடைத்துள்ளனர். இதனால் அந்த வீட்டில் இருக்காமல் விஷால் தனது அம்மாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக சம்பவதினம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கின்றனர். ஆனால் கல்பனா எதற்கு காதுகொடுக்காமால் கடுமையான வார்த்தைகளால் பேசி அடித்தும் இருக்கிறார்.
இதனைக் கேட்ட கணவன் விஷாலை மீண்டும் அடித்து உதைத்திருக்கிறார்கள். இதனால் காயமடைந்த விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி பொலிஸில் முறைப்பாடை கொடுக்கவே கல்பனா மற்றும் அவரின் குடும்பத்தினரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண நாளை மறந்த கணவனுக்கு இப்படியான ஒரு சம்பவமா என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.