நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி! தரதரவென இழுத்து ரயில் முன் தள்ளிய கணவர்: பகீர் காட்சி
மும்பை ரயில் நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்த மனைவியை இழுத்துச்சென்று ரயில் முன்பு தள்ளி கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் தூங்கிய மனைவி
மும்பை அருகிலுள்ள வசாய் ரயில் நிலையத்துக்கு பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வந்துள்ளார்.
அவர்கள் செல்ல வேண்டிய ரயில் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் ரயில்வே நிலையத்தில் பிளாட்பாரத்தில் பெஞ்ச் ஒன்றில் உறங்க ஆரம்பித்தனர்.
அதிகாலை 4:10 மணிக்கு எழுந்த அந்தப் பெண்ணின் கணவர், உறங்கிக்கொண்டிருந்த தன் மனைவியை வேகமாக எழுப்பிய நிலையில், உறக்கத்திலிருந்து எழுந்து என்னவென கேட்பதற்குள் ரயிலில் தள்ளிவிட்டுள்ளார்.
அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் மோதி சம்பவ இடத்தில் பெண் உயிரிழந்துள்ளார்.

குழந்தைகளை தூக்கி எஸ்கேப் ஆகிய கணவர்
மனைவியை ரயிலில் தள்ளிவிட்டு, உறங்கிக் கொண்டிருந்த தன் இரண்டு குழந்தைகளையும் அவசரமாக எழுப்பிக்கொண்டு அங்கிருந்து அந்த நபர் புறப்பட்டுச் சென்ற நிலையில், ரயில் நிலைய கண்காணிப்பு கமெராவில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இக்காட்சி தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்யாண் ரயில் நிலையத்திலும் குறித்த நபர் தென்பட்ட நிலையில், தனிப்படை போலீஸார் தானேவில் அவரை கைது செய்துள்ளனர்.
#मुम्बई से सटे वसई में सामने आई बेहद ही दिल दहला देने वाली घटना
— DINESH SHARMA (@medineshsharma) August 23, 2022
वसई स्टेशन के प्लेटफॉर्म पर सो रही पत्नी को उठाकर पति ने एक्सप्रेस ट्रेन के नीचे धकेला.
पत्नी को ट्रेन के नीचे फेंकने के बाद अपने दो बच्चों के फरार हुए आरोपी पति #Mumbai #railway #crime pic.twitter.com/B7gr82EM2r