உயிரிழந்த கணவனின் முகத்தை கடைசியாக பார்க்கவிடாமல் விரட்டிய மாமியார்: மருமகள் எடுத்த விபரீத முடிவு
இந்தியாவில் உயிரிழந்த கணவரின் முகத்தினை ஒருமுறை பார்க்க விடாமல் மாமியார் விரட்டியதால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உத்திரப்பிரதேசம் மாவட்டத்தில் உள்ள ஏட்டா மாவட்டத்தை சேர்ந்தவரான அரவிந்த் சிங்(24) இந்திய ராணுவத்தில் பணி புரிந்து வந்துள்ளார்.
இவருக்கும் ஆர்த்தி(24) என்ற பெண்ணுடன் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த மனைவி சண்டையால் தாய் வீட்டிற்கு பிரிந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 8ம் திகதி காஷ்மீரில் உள்ள கணவர் அரவிந்த் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கணவரின் முகத்தை கடைசியாக பார்ப்பதற்கு ஆர்த்தி வந்துள்ளார்.
ஆனால் அவரது மாமியார் கணவரின் முகத்தை பார்க்கவிடாமல் தடுத்து ஊர் மக்களின் முன்னரே தகாத வார்த்தைகளால் திட்டி அசிங்கப்படுத்தியுள்ளார்.
இதனால் மிகவும் மன உ.ளைச்சலுக்கு ஆளான ஆர்த்தி அவரது வீட்டிற்கு சென்று படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.