கப்பலில் போக ஆசைப்பட்ட மனைவிக்காக கப்பலைப்போலவே வீடு கட்டிய கணவன்!
மனைவி ஆசைப்பட்ட ஒரே காரணத்தால் கப்பலை வீடாக மாற்றிய கணவன் ஒருவரின் நெகிழ்ச்சி சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
கப்பல் கட்டிய கணவன்
மவைி ஆசைப்பட்டால் என்ற ஒரே காரணத்திற்காக அவளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக 1.5 ரூபாய் செலவில் கப்பல் வடிவில் வீடு கட்டியிருக்கிறார்.
கடலூர் மாவட்டத்தில் சிங்காரத்தோப்பை பகுதியில் சுபாஷ் என்பவர் மரைன் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுபஸ்ரீ என்ற மனைவியும் சுபாஷ்- சுபஸ்ரீ தம்பதிகளுக்கு 2 மகள்களும் இருக்கிறார்கள்.
இப்படி இவர்கள் சந்தோசமாக வாழ்ந்துக் கொண்டிருந்த போது கணவனிடம் மனைவி ஆசையாக கப்பலில் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
இதனால் சுபாஷ் தன் மனைவிக்காக கப்பலை போலவே வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி கடலூர் வண்ணாரபாளையம் பகுதியில் 11,000 சதுர அடியில் ஒரு இடத்தினை வாங்கி அதில் 4 ஆயிரம் சதுர அடியில் கப்பல் போன்ற வடிவமைப்பில் வீடு கட்டியிருக்கிறார்.
இவர் கடந்த 2 ஆண்டாக வீடு கட்டும் பணிகளை ஆரம்பித்து தற்போது பிரமாண்டமாக வீட்டைக் கட்டி புதுமனை புகுவிழா ஒன்றையும் நடத்தியிருக்கிறார்.
இந்த சமயத்தில் சுபாஷ் கட்டிய வீடுகளை அனைத்து ஊடகங்களும் அவர் பக்கம் சென்று அவரின் வீட்டை வைரலாக்கி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |