வீட்டு வேலை செய்துவந்த இளம்ஜோடி: கதவைப் திறந்து பார்த்த தொழிலதிபருக்கு கிடைத்த பேரதிர்ச்சி
தொழிலதிபர் வீட்டில் வேலை பார்த்து வந்த இளம்ஜோடிகள் வீட்டிலிருந்த பணம், நகைகளை கொள்ளையிட்டு சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் குர்மீத் சிங். பிரபல தொழிலதிபரான இவர் தனது வீட்டில் நேபாளத்தை சேர்ந்த கணவன் மனைவியையும் மேலும் நான்கு பேரையும் வீட்டு வேலைக்காக வைத்துள்ளார்.
இந்நிலையில் தனது குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டு வீடுதிரும்பிய போது, நோபாள தம்பதிகள் தவிர மற்ற அனைவரும் மயக்கிகிடப்பதையும், வீட்டின் முன்கதவு திறந்திருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
உடனே பணியாளர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தநிலையில், சிகிச்சைக்கு பின் அவர்கள் குணமடைந்தார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்ததில், நேபாளத்தை சேர்ந்த தம்பதி மற்ற பணியாளர்களுக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்துகொடுத்துவிட்டு, வீட்டில் இருந்த பணம் நகைகளை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் நேபாளத்தை சேர்ந்த தம்பதியை தேடி வருகின்றனர்.