ஆமை மோதிரம் பணத்தை ஈர்க்குமா? தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்மிக ரகசியங்கள்!

Vastu Tips Hinduism Money
By Vinoja Sep 11, 2026 05:58 AM GMT
Report

Tortoise Ring Benefits: பொதுவாகவே மனிதர்கள் அனைவருக்கும் செல்வ செழிப்புடக் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். ஆனால் சிலர் சிலரால் எவ்வளவு கடினமாக உழைத்ததாலும் ஆசைப்பட்ட வாழ்க்கையை அடைய முடியாத நிலை இருக்கும்.

சிலரோ மிக குறைந்த முயற்ச்சியிலேயே வாழ்க்கையில் குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைவார்கள் இதற்கு அவர்களின் முயற்ச்சி மிக முக்கிய காரணமாக இருந்தாலும் சில ஆன்மீக வி்டயங்களின் தாக்கமும் இருப்பதாக நம்பப்படுகின்றது.

ஆமை மோதிரம் பணத்தை ஈர்க்குமா? தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்மிக ரகசியங்கள்! | How To Wear A Tortoise Ring Benefits Who Avoid

14 நாட்கள் தொடர்ந்து முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? மருத்துவ விளக்கம்

14 நாட்கள் தொடர்ந்து முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? மருத்துவ விளக்கம்

அந்தவகையில், சிலர் தங்களது கைகளில் ஆமை வடிவிலான மோதிரத்தை அணிந்திருப்பதை நாம் பார்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் ஏன் ஆமை மோதிரத்தை அணிந்திருக்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழுவது இயல்புதான்.

இந்த மோதிரத்தை அணிவதற்குப் பின்னால் என்ன காரணம் இருக்கிறது? ஆமைக்கும் செல்வச் செழிப்புக்கும் என்ன தொடர்பு? இதுபற்றி ஆன்மிக மற்றும் ஜோதிட நம்பிக்கைகள் என்ன சொல்கின்றன என்பதைப்  இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆமைக்கும் செல்வச் செழிப்புக்கும் என்ன தொடர்பு?

இந்து சமயப் புராணங்களில் ஆமைக்கு முக்கியமான இடம் உள்ளது. திருமாலின் தசாவதாரங்களில் ஒன்றாக கூர்ம அவதாரம் கருதப்படுகிறது. பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தைப் பெறும் நிகழ்வில், மந்தர மலையைத் தாங்குவதற்காக திருமால் ஆமை வடிவம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

ஆமை மோதிரம் பணத்தை ஈர்க்குமா? தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்மிக ரகசியங்கள்! | How To Wear A Tortoise Ring Benefits Who Avoid

அதாவது, உலகையே தாங்கும் வலிமை, பொறுமை மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாக கூர்ம அவதாரம் பார்க்கப்படுகிறது. மேலும், ஆமை வடிவம் மகாலட்சுமியின் அருள், செல்வம் மற்றும் வளத்துடன் தொடர்புடையதாக சில பாரம்பரிய ஆன்மிக நம்பிக்கைகளில் கருதப்படுகிறது.

இதன் காரணமாகவே ஆமை வடிவிலான பொருட்களை வீட்டில் வைத்திருப்பதும், ஆமை மோதிரத்தை அணிவதும் செல்வ வளத்தை ஈர்க்கும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது.

ஆமை மோதிரம் பணத்தை ஈர்க்குமா? தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்மிக ரகசியங்கள்! | How To Wear A Tortoise Ring Benefits Who Avoid

ஆமை மோதிரத்தை எப்படி அணிய வேண்டும்? 

ஆமை மோதிரத்தை அணிய விரும்புபவர்கள் அதன் வடிவமைப்பிலும் சில விஷயங்களை கவனிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஆமையின் தலைக்குப் பின்புறத்தில் “ஸ்ரீ” என்ற எழுத்து இடம்பெற்றிருப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

“ஸ்ரீ” என்பது செல்வம், வளம் மற்றும் மங்களத்தைக் குறிக்கும் சொல்லாகப் பார்க்கப்படுகிறது. எனவே, ஆமை வடிவத்துடன் “ஸ்ரீ” என்ற எழுத்தும் இடம்பெற்றிருக்கும் மோதிரத்தை அணிவது சிறப்பான பலனைத் தரும் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது.

ஆமை மோதிரம் பணத்தை ஈர்க்குமா? தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்மிக ரகசியங்கள்! | How To Wear A Tortoise Ring Benefits Who Avoid

எந்த விரலில் அணிய வேண்டும்?

ஆமை மோதிரத்தை பொதுவாக வலது கையின் நடுவிரல் அல்லது மோதிர விரலில் அணியலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், மோதிரத்தை அணியும் முறையிலும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அதாவது, மோதிரத்தில் இருக்கும் ஆமையின் தலை நம்மை நோக்கியவாறு இருக்க வேண்டும்.

ஆமையின் தலை வெளிப்புறத்தை நோக்கி இல்லாமல், நம்மை நோக்கியபடி இருப்பது முக்கியம் என்று இந்த நம்பிக்கையைப் பின்பற்றுபவர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணம், ஆமையின் தலை தன்னை நோக்கி இருப்பது செல்வம், வளம் மற்றும் நேர்மறை ஆற்றல் தன்னை நோக்கி வருவதைக் குறிக்கும் என்ற நம்பிக்கையாகும்.

ஆமை மோதிரம் பணத்தை ஈர்க்குமா? தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்மிக ரகசியங்கள்! | How To Wear A Tortoise Ring Benefits Who Avoid

மேலும் ஆமை மோதிரத்தை வாங்கியவுடன் உடனடியாக அணிவதைவிட, முதலில் அதனை முறையாகச் சுத்தப்படுத்தி, வழிபாட்டுடன் அணிவது சிறந்தது.  அதன்படி, முதலில் மோதிரத்தை காய்ச்சாத பால் மற்றும் கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளலாம். பின்னர் மகாலட்சுமியை மனதில் நினைத்து, அவருக்குரிய ஸ்தோத்திரங்களை உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும்.

அதன் பிறகு, ஆமையின் தலை நம்மை நோக்கிய நிலையில் இருப்பதை உறுதி செய்து மோதிரத்தை அணிந்து கொள்ளலாம். இவ்வாறு முறையாக வழிபாடு செய்து அணிவதால், மகாலட்சுமியின் அருள் கிடைத்து வாழ்க்கையில் செல்வ வளமும் நன்மைகளும் பெருகும் என்பது நம்பிக்கை.

ஆமை மோதிரம் அணிந்தால் அதிர்ஷ்டம் வருமா?

ஆமை மோதிரத்தை அணிந்தால் அதிர்ஷ்டம் வரத் தொடங்கும், பணவரவு அதிகரிக்கும், செல்வச் செழிப்பு பெருகும் என்று பலர் நம்புகின்றனர். குறிப்பாக, பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, பணம் சேரத் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. “பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்” என்று சொல்லும் அளவுக்கு இந்த மோதிரத்திற்கு சக்தி இருப்பதாகவும் சில ஆன்மிக நம்பிக்கைகளில் குறிப்பிடப்படுகின்றது.

அதாவது, திடீர் அதிர்ஷ்டம், எதிர்பாராத பணவரவு, தொழிலில் முன்னேற்றம், செல்வ வளம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பை இது உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், ஆமை என்பது பொறுமை, அமைதி மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாக கருதப்படுவதால், இதனை அணிவதால் மனம் தெளிவடைந்து அமைதியாக இருக்கும் என்றும் சிலர் நம்புகின்றனர்.மனதில் இருக்கும் குழப்பங்கள் குறைந்து, தெளிவாகச் சிந்திக்கும் தன்மை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆமை மோதிரம் பணத்தை ஈர்க்குமா? தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்மிக ரகசியங்கள்! | How To Wear A Tortoise Ring Benefits Who Avoid

வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்!

வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்!

எந்த ராசிக்காரர்கள் ஆமை மோதிரத்தை அணியக்கூடாது?

ஆமை தண்ணீரில் வாழும் உயிரினம் என்பதால், சில ஜோதிட நம்பிக்கைகளில் இதனை நீர் ராசிகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கின்றனர். அதன்படி, கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகியவை நீர் ராசிகளாகக் கருதப்படுகின்றன.

எனவே, இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் ஆமை மோதிரம் சாதகமாக இல்லாமல் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சில ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.இதனால், கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்கள் ஆமை மோதிரத்தை அணிவதைத் தவிர்ப்பது நல்லது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).              

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US