அலாரம் வைக்காமலேயே காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமா? அருமையான Tips!
பொதுவாக அதிகாலையில் எழுந்திருப்பது பல நன்மைகளை கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அதிகாலையில் எழுவது நம்மில் பலராலும் முடியாத காரியமாகவே இருக்கின்றது.
இன்றைக்காவது சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என நினைத்து அலாரம் வைத்து அதை காலையில் அணைத்துவிட்டு தூங்குபவர்கள் ஏறாளம்.
அதிகாலையில் எழுந்திருப்பது உங்கள் நாளை நோக்கத்துடன் தொடங்க உதவும். சீக்கிரம் எழுவது உடற்பயிற்சி செய்ய உங்களுக்கு அதிக நேரத்தை கொடுப்பதுடன் உற்சாகத்தையும் வழங்குகின்றது. அலாரம் வைக்காமலேயே காலையில் சீக்கிரமாக எழுந்துக்கொள்ள எளிமையாக பின்பற்றக்கூடிய சில பழக்ங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சீக்கிரம் எழுந்திருக்க எளிய வழிகள்
முதலில் காலையில் சீக்கிரமாக எழுந்துக்கொள்ள வேண்டும் என்றால், எந்த வேலையையும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் எழுந்திருக்க கூடாது. மாறாக அதிகாலையில் எழுந்துக்கொள்ள உடலை பழக்கப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு மனதில் வேலை செய்ய வேண்டும் என்ற தேவை இல்லாத போது மூளை பதற்றம் இன்றி இருக்கும் இதனால் இரவில் நல்ல தூக்கத்தை பெற முடியும். இதனால் காலையில் நீங்கள் நினைத்த நேரத்திற்கு அலாரம் இல்லாமலேயே எழுந்துக்கொள்ள முடியும்.
காலையில் தினசரி உடற்பயிற்ச்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்வதும் காலையில் சீக்கிரம் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள துணைப்புரியும்.
முக்கியமாக காலையில் சீக்கிரம் எழும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், இரவில் படுக்கைக்கு செல்வதற்கு குறைந்தது ஒரு மணிநேரத்துக்கு முன்னர் கைபேசியை தூரமாக வைத்துவிட வேண்டும். செல்போனில் இருந்து வெளிவரும் கதிர் வீச்சி சிறந்த தூக்கத்துக்கு மிகப்பெரும் எதிரியாகும்.
முக்கியமாக இரவு உணவை தூங்க செல்வதற்கு 3 மணிநேரத்துக்கு முன்போ சாப்பிட வேண்டும். இது நல்ல தூக்கத்தை பெருவதற்கும் காலையில் சீக்கிரம் எழுவதற்கும் பெரிதும் துணைப்புரிகின்றது.
காலையில் நம் மீது சூரிய ஒளி படும் அளவிற்கு வெளிச்சம் இருக்கும் அறையில் தூங்குவதும் காலையில் சீக்கிரம் எழுவதற்கும் உதவியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |