உலகின் மிகவும் ஆபத்தான உணவு எதுன்னு தெரியுமா? கொஞ்சம் சாப்பிட்டாலும் புற்றுநோய் உறுதி!
பொதுவாகவே அனைவருக்கு விதவிதமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் பிடித்த விடயமாக இருக்கும்.
நீங்கள் உணவுப் பிரியரா? அப்படியானால் உங்களுக்கு ஓர் வியப்பூட்டும் செய்தி. நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் சில நம் உயிருக்கே உலை வைக்குமாம்.
அதிலும் நீங்கள் வித்தியாசமான உணவுகளை சுவைக்க விரும்புபவராயின் கவனமாக இருக்க வேண்டும். உலகில் மிகவும் ஆபத்தான உணவு எது என்று உங்களுக்கு தெரியுமா?
மிகவும் ஆபத்தான புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய உணவாகவும் அதே நேரத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு சுவையான உணவாகவும் அறியப்படும் உணவு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏன் ஆபத்தானது?
குறித்த உணவு தெற்காசியாவில் தான் பிரபலமாக காணப்படுகின்றது. இந்த உணவு ஒரு நபரின் கல்லீரலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமாக அமைவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த உணவை சாப்பிடுதால் விரைவில் மரணம் ஏற்படும் என தெரிந்துமே இந்த உணவை இந்த உணவின் அலாதியான சுவை காரணமான அதிகமாக நுகரப்படுகின்றது. இது தாய்லாந்தில் தயாரிக்கப்படும் விசேட உணவாகும்.
இந்த உணவை சாப்பிடுவதால் கல்லீரலில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று கூறப்படுகிறது. இதை ஒரு முறை கடித்தால் கூட நேரடியாக புற்றுநோயை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது. ஆய்வுகளின் பிரகாரம் தாய்லாந்தில் இந்த உணவை சாப்பிடுவதால் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றர்.
இவ்வளவு ஆபத்து இருந்தாலும் தாய்லாந்தின் Khon Kaen மாகாணத்தில் உள்ள மக்கள் இந்த உணவை தவிர்க்கமுடியாத அளவுக்கு விரும்புகின்றனர்.அப்படி என்ன உணவு என சிந்திக்கின்றீர்களா?
மீனில் தயார் செய்யப்படும் ஓர் உணவு தான் இது. மீன் உடல் ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பானது தான் ஆனால் அதில் இருக்கும் ஒட்டுண்ணி புழுக்கள் உணவின் மூலம் மனிதனின் உடலில் நுழைந்து அதை சாப்பிடுபவரின் உயிரையே பறிக்கும் புற்நோயாக மாறுகின்றது.
இந்த உணவின் பெயர் கோய் பிளா. பச்சை மீன்களை சிறு துண்டுகளாக வெட்டி, இதில் மூலிகைகள், மசாலா மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தயாரிக்கப்படுகின்றது.
தாய்லாந்தில் மில்லியன் கணக்கில் விற்பனை செய்யப்படும் இந்த உணவு கல்லீரல் மற்றும் பித்தப்பை நாள புற்றுநோய்க்கு காரணமான அமைக்கின்றது. இதன் காரைணமாகவே இந்த உணவு உலகில் ஆபத்தான உணவாக அறியப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |