ஒரே போனில் இரண்டு வாட்ஸ் அப் கணக்கை எவ்வாறு பயன்படுத்துவது?
ஒரே டிவைஸில் இரு வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
இன்று பெரும்பாலான நபர்கள் கண்விழிக்கும் போதிலிருந்து உறங்கும் வரை கையில் போன் இல்லாமல் இருப்பதில்லை. அதிலும் முக்கியமாக Whatsapp இணையத்தை அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது குறுஞ்செய்தியில் தொடங்கி பண வர்த்தனை வரை அனைத்தும் வாட்ஸ் அப்பினை பயன்படுத்தி செய்து கொள்ள முடியும்.
இதற்கு வாட்ஸ்அப் நிறுவனமும் தொடர்ந்து பல அப்டேட்டுகளை செய்து கொண்டே இருக்கின்றது. பணம் செலுத்துதல், ஸ்கிரீன் ஷேரிங் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை ஒரே செல்போனில் இருந்து உருவாக்கிக்கொள்ளும் வசதி என்று பல புதிய அம்சங்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றது.
புதிய அப்டேட்
முன்பெல்லாம் அலுவலகத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ்அப் தற்போது சொந்த பயன்பாட்டிற்கும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
தனி தனி சிம்கார்டுகள் இருந்தால் மட்டும் இரண்டு வேறு கணக்குகளை பயன்படுத்த முடியும். இதற்காக இரண்டு செல்போன்களை பயன்படுத்த வேண்டியிருந்தது.
தற்போது ஒரே வாட்ஸ் அப்பில் இரு கணக்குகளை உருவாக்கும் வசதியை இந்த 2024ம் ஆண்டில் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
தற்போது அலுவலகம் மற்றும் சொந்த பயன்பாடு இரண்டிற்கும், ஒரே வாட்ஸ்அப்பில் பயன்படுத்தும் அம்சம் தற்போது பயனர்களுக்கு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.
இந்த வசதியை பயன்படுத்த முதலில் உங்களுடைய whatsapp அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன்பிறகு whatsappக்குள் சென்று வலது பக்க மேல் முனையில் உள்ள அந்த மூன்று புள்ளியை தொடும்பொழுது அதில் உங்கள் சுயவிவர பக்கத்தை உங்களால் பார்க்க முடியும்.
அதில் Accounts என்ற பக்கத்திற்கு சென்று அங்கு "ஆட் அக்கவுண்ட்" என்று காண்பிக்கப்படும் அந்த இடத்தில் நீங்கள் லாகின் செய்து ஒரே நேரத்தில் உங்களால் இரண்டு கணக்குகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஒரே செல்போனில் ஒரே எண்ணில் இரண்டுக்கும் மேற்பட்ட கணக்குகளை உங்களால் இனி எளிமையாக இந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |