முடி நீளமாக வளர அரிசி நீரை இப்படி யூஸ் பண்ணுங்க
பொதுவாகவே பெண்களுக்கு தனது முடியை ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வைத்துக்கொள்வதி அதீத விருப்பம் இருக்கும்.
அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் பல பொருட்களை வாங்கி நாசமாக்கிக் கொள்கின்றனர்.
ஆகவே வீட்டில் இலகுவாக கிடைக்ககூடிய பொருட்களான அரிசி தண்ணீரை வைத்து எப்படி முடியை பராமரிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்தக்கொள்வோம்.
அரிசி நீர்
அரிசி நீர் முடியை வலுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், கூடுதல் துள்ளல் மற்றும் பிரகாசத்தையும் தருகிறது. அரிசி நீரானது அரிசியை ஊற வைத்த பின் மீந்து இருக்கும் மாவுச்சத்துள்ள நீராகும்.
இதை சுமார் இரண்டு நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். அல்லது வேகவைத்த அரிசி தண்ணீரை கூட பயன்படுத்தலாம்.
எப்படி பயன்படுத்துவது?
தலைமுடியை ஷாம்பு போட்டு கழுவிக் கொள்ள வேண்டும். அடுத்து அரிசி நீரினால் கழுவவும். சுமார் 20 நிமிடங்கள் விட்டுவிட்டு மீண்டும் கழுவவும்.
இதை தொடர்ந்து செய்து வர நல்ல பலனைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |