முகத்திற்கு புது வெளிச்சம் கொடுக்கும் மசூர் பருப்பு ஸ்க்ரப்- இப்படி செய்து பாருங்க பலன் நிச்சயம்
முகத்தை வெளியில் இருக்கும் க்ரீம்களை வாங்கி போட்டு பொலிவாக வைப்பதிலும் பார்க்க வீட்டிலுள்ள சில பொருட்களை பயன்படுத்துவதால் நிரந்தரமான தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.
அந்த வகையில் முகத்தை பிரகாசமாக வைக்கும் வேலையை பச்சை பயறு மற்றும் மசூர் பருப்பு செய்கிறது.
அத்துடன் கற்றாழை ஜெல் கலந்தாலும் பலனை இரட்டிப்பாக பார்க்கலாம்.
இந்த பேக் இயற்கையானது என்பதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் வராது.
இதன்படி, முகத்தை பொலிவாக்கும் மசூர் பருப்பு பேக் எப்படி செய்யலாம்? எப்படி பயன்படுத்தலாம்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மசூர் பருப்பு+ தயிர்
மசூர் பருப்பில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இதனால் வாரத்திற்கு ஒரு முறையாவது மசூர் பருப்பு பேஸ்ட் போல் அரைத்து முகத்திற்கு தடவ வேண்டும்.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மாறும். அத்துடன் சரும எக்ஸ்ஃபோலியேஷன் மூலம் இறந்த செல்கள் அகற்றப்பட்டு புதிய செல்கள் வளர்ச்சியடையும்.
மசூர் பருப்பை எண்ணெய் சருமம் உள்ளவர்களும் வறண்ட சருமம் உள்ளவர்களும் பயன்படுத்தலாம். அரைத்த பருப்புடன் பாதாம் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து பேக்காக போடலாம். முகத்திற்கு புது பொலிவை மசூர் பருப்பு பெற்றுக் கொடுக்கும்.
மசூர் பருப்பு+ கற்றாழை+ ஜெல் பேஸ்ட்
மசூர் பருப்பு + கற்றாழை ஜெல் ஆகிய இரண்டையும் பேஸ்ட் போல் அரைத்து கலந்து முகத்தில் தடவி தேய்க்க வேண்டும். இரசாயனம் கலந்த க்ரப்பரை விட இது நல்ல பலனை கொடுக்கும்.
மசூர் பருப்பை அரைத்து, விழுதுடன் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்தால் போதுமானதாக இருக்கும். வறண்ட சருமம் கொண்டவர்களாக இருந்தால் கற்றாழை ஜெல் கலந்து கொள்ளலாம்.
இந்த க்ரப்பை வாரத்திற்கு இரண்டு முறை முகத்திற்கு போடுவதால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் குறைந்து முகம் இன்னும் பொலிவு பெறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |