ஃப்ரிட்ஜை 2 மணித்தியாலத்துக்கு ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கிறீங்களா? அப்போ இது உங்களுக்குத்தான்
ஒவ்வொரு வீட்டிலும் தற்போது குளிர்சாதனப் பெட்டி இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகிறது. உணவுகள் பழுதடையாமல் இருக்க, உணவுப் பொருட்களை பாதுகாத்து வைக்க இந்த குளிர்சாதனப் பெட்டி மிகவும் உதவுகிறது.
சிலரது வீடுகளில் தொடர்ந்து 24 மணிநேரமும் குளிர்சாதனப் பெட்டி இயங்கிக் கொண்டிருக்கும். இடையில் ஒரு 3 மணித்தியாலம் குளிர்சாதனப் பெட்டியை நிறுத்தி வைப்பார்கள்.
உண்மையில் குளிர்சாதனப் பெட்டியை ஆஃப் செய்வது சரியான ஒன்றா? அல்லது அவ்வாறு செய்யக் கூடாதா? என்பதில் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்..
குளிர்சாதனப் பெட்டியின் வேலையே உணவுப் பொருட்களை குளிர்விப்பது தான். ஃபிரிட்ஜில் உள்ளே இருக்கும் அறைகள் குளிர்ச்சியாக இருக்கும் வரையில் உணவுகள் கெட்டுப்போகாமல் இருக்கும்.
மின்னோட்டமானது குளிர்சாதனப் பெட்டிக்கு செல்லும் செல்லும்வரையில் இந்த குளிர்விக்கும் செயல்முறை தொடர்ந்து நடைபெறும். குளிர்சாதனப் பெட்டியை ஆஃப் செய்த பிறகும் உணவு கெட்டுப்போகாமல் இருக்கும்.
image - homeserve
குளிர்சாதனப் பெட்டியை எத்தனை மணிநேரம் இயக்க முடியும்?
குளிர்சாதனப் பெட்டியானது, அதிக நேரம் தொடர்ந்து இயங்கும் வகையில்தான் தயாரிக்கப்படும். எனவே அதனை தொடர்ந்து இயக்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அதனை சுத்தம் செய்யும்போதும் ஏதேனும் சேதமடைந்த பட்சத்தில் சரி செய்யும்போதும் நிச்சயமாக சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டியை 2 மணிநேரமே அல்லது ஒரு நாள் முழுவதும் பலமுறை ஆன் செய்து ஆஃப் செய்தாலோ சரியான குளிர்ச்சியை கொடுக்க முடியாது.
மின்சாரத்தை சேமிக்கின்றேன் எனும் பெயரில் இவ்வாறு செய்வது அவ்வளவு சரியான செயல் இல்லை. ஏனென்றால் குளிர்சாதனப் பெட்டி தானாகவே மின்சாரத்தை சேமிக்கும் திறன் கொண்டது.
அதாவது, தற்போது புதிய மாடல் வகையான பிரிட்ஜ்கள் சிக்கனத்தை கடைபிடிப்பதற்காக தானியங்கி ஆஃப் அல்லது ஆட்டோ கட் அம்சங்களைக் கொண்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் குளிர்சாதனப் பெட்டி குறிப்பிட்ட வெப்பநிலைக்கு குளிர்ந்த பிறகு தானாகவே அணைக்கப்படும்.
இதனால் மின்சாரம் சேமிக்கப்படும். இறுதியாக குளிர்சாதனப் பெட்டியை அடிக்கடி ஆன் ஆஃப் செய்வது அதில் கோளாறை ஏற்படுத்தும்.
எங்கேனும் வெளிநாடுகளுக்கு செல்லும் பட்சத்தில் குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் பொருட்களை எடுத்து வெளியில் வைத்துவிட்டு ஆஃப் செய்துவிட்டு செல்லலாம்.