வாழைப்பழத் தோலை தூக்கிப் போடாதீங்க- இனி முகத்திற்கு Use பண்ணி பாருங்க
சந்தையில் முழுவதும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய பழமாக வாழைப்பழம் பார்க்கப்படுகின்றது.
இந்த பழத்தில் மனித உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் ஏராளமான சத்துக்கள் உள்ளன.
தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால், செரிமான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி விடும் என பலரும் கூறி கேட்டிருப்போம். அப்படி வாழைப்பழத்தை சாப்பிடும் போது, அதன் தோலை குப்பை போடுவது வழக்கம்.
வாழைப்பழத்தை போல் அதன் தோலிலும் ஏராளமான ஊட்டசத்துக்கள் உள்ளன. வாழைப்பழ தோலில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் தலைமுடி முதல் சருமம் வரை பாதுகாக்கின்றது.
அந்த வகையில், வாழைப்பழ தோலை எப்படி சருமம், தலைமுடிக்கு பயன்படுத்துவது தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.
1. வாழைப்பழத் தோல் Mask
வாழைப்பழத் தோலை சரும கருமை, சரும வறட்சி, சரும சுருக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கின்றது.
முதலில் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி, துணியால் துடைக்க வேண்டும்.
பின்னர் வீச வைத்திருந்த வாழைப்பழத்தின் தோலை எடுத்து, அதன் உட்பகுதியால் முகத்தை மென்மையாக 15-20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதனை தினமும் செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மாறி, இளமையாக காட்சியளிப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |