புதிய மொபைல் போன் வாங்குகின்றீர்களா? ஆயுள் அதிகரிக்க இதை சரியா செய்திடுங்க
புதிதாக வாங்கும் மொபைல் போனின் ஆயுள் நீடிக்கவும், அதிக காலம் வைத்திருக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் மொபைல் போன் என்பது அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகி உள்ளது. ஆம் சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் இல்லாமல் இருப்பதில்லை.
அதுமட்டுமில்லாமல் பண்டிகை காலங்களில் செல்போன்களுக்கு பல ஆஃபர்களும் வந்து வாடிக்கையாளர்களின் ஆசையை தூண்டி விடுகின்றது.
இதனால் புதிய மொபைல் போன் வாங்குவதற்கு பல ஆயிரங்களை செலவு செய்து வாங்கிவிடுகின்றனர். ஆனால் இவ்வாறு வாங்கும் மொபைல் நீண்ட காலம் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதனை இங்கு தெரிந்து கொள்வோம்.
புதிய மொபைலை எவ்வாறு பராமரிப்பது?
முதலில் நாம் வாங்கும் மொபைலில் சரியான ஸ்க்ரீன் ப்ரொடக்டரை வாங்கிக் கொள்ளவும். ஏனெனில் செல்போன் டிஸ்பிளேவில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நீங்கள், மொபைல் வாங்கிய மதிப்பில் 40 முதல் 45 சதவீதம் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.
மொபைல் போன் வாங்கும் போது அதற்கான சரியான கவர் வாங்கி விட வேண்டும். மாடர்னாக, ஸ்டைலாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்காமல் மொபைல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கேற்ப கேஸ் கவரை தெரிவு செய்து வாங்க வேண்டும்.
தற்போது வரும் மொபைல் போன்களின் பேட்டரிகளில் 30 சதவீதம் ஆனாலே சார்ஜ் போட்டுவிட வேண்டும். மேலும் 100 சதவீதம் என்று சார்ஜ் போடாமல் 90 சதவீதத்திலேயே நிறுத்திக் கொள்ளவும்.
தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்து மெமரியை நிரப்ப வேண்டாம். இதனால் மொபைல் போனின் வேகம் குறைவதுடன், பேட்டரியிலும் சிக்கல் ஏற்பட்டுவிடும்.
மொபைல் போனை சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சூரிய வெளிச்சத்தில் நீங்கள் செல்போனை பயன்படுத்த வேண்டும் என்றால் அதிகளவு பிரைட் வைக்க வேண்டியிருக்கும். இதனால் மொபைல் போன் சூடாகும். மேலும் இறுக்கமான ஜீன்ஸ் பேண்டில் மொபைல் போனை வைக்க வேண்டாம்.
மொபைல் போனை அவ்வப்போது அப்டேட் செய்து கொள்ள வேண்டும். நிறுவனங்கள் சில ஆண்டுகள் வரை செக்யூரிட்டி அப்டேட் கொடுப்பதால் உடனடியாக அப்டேட் செய்து கொண்டால், மொபைல் செயல்பாடு அதிகரிக்கும்.
குடும்பத்தினரால் ஒதுக்கப்படும் பாக்கியா! பழைய தோழியாக மாறி பாசம் காட்டிய ராதிகா.... எதிர்பாராத திருப்பம்
எந்தவொரு மொபைலாக இருந்தாலும், பாதுகாப்பு இல்லாத தளங்களுக்கு செலவதை தவிக்க வேண்டும்.
இவ்வாறு மொபைல் போனை கவனமாக வைத்துக் கொண்டு உங்களது மொபைலின் ஆயுள் சற்று அதிகமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |