நெய்யை எத்தனை நாள் வைத்து சாப்பிடலாம்... எப்பொழுது கெட்டுப்போகும்னு தெரியுமா?
நெய் கெட்டுப்போகுமா? என்ற கேள்வியை எழுப்பும் நபர்களுக்கான பதிவுவே இதுவாகும்.
நெய்
நூற்றாண்டு காலமாக நெய் இந்திய சமையலில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உடம்பிற்கு அதிகமான நன்மைகளை வாரி வழங்கும் நெய் மருத்துவத்திற்கும் பயன்படுகின்றது.
செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இளமையாக வைக்கவும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு இன்னும் அதிகமாகவே இருக்கின்றது.
இந்திய உணவுகளான ரொட்டி, பருப்புகள், காய்கறி, பிரியாணி இவற்றிற்கும், இனிப்பு செய்வதற்கும் பயன்படுத்தப்படும் நெய் நிறைவுற்ற கொழுப்புகளால் ஆனதாகும்.
இத்தருணத்தில் நெய் கெட்டுப்போகுமா? இல்லையா? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். இதற்கான பதிலையே தற்போது தெரிந்து கொள்வோம்.
எப்படி கண்டுபிடிப்பது?
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் மற்ற பொருட்களைப் போன்று நெய்யும் கெட்டுப்போக அதிகமான வாய்ப்புகள் உள்ளது.
துர்நாற்றம், புளிப்பான வாசனை வந்தால் நெய் கெட்டுப்போய்விட்டதாக அர்த்தம்.
நெய்யில் ஏதெனும் நிறமாற்றம் காணப்பட்டாலோ, மென்மையான கிரீம் போன்ற அமைப்பில் மாற்றம் ஏற்பட்டாலோ நெய் கெட்டுப்போய் விட்டது என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளவும்.
நீண்ட நாள் பயன்படுத்த என்ன செய்யலாம்?
நெய் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றால் காற்று மற்றும் ஈரப்பதம் வெளிப்படுவதை தடுக்க காற்று புகாத கண்ணாடி டப்பாவில் நெய்யை சேமித்து வைக்கவும்.
நேரடியாக சூரிய ஒளி மற்றும் வெப்ப மூலங்களில் இருந்து விலக்கி, குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் வைக்க வேண்டும்.
நெய்யை நீங்கள் எடுக்கும் போது ஈரம் இல்லாத, சுத்தமான ஸ்பூன் கொண்டு எடுக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் கடைபிடித்தால் 3 ஆண்டுகள் வரை நெய் கெட்டுப்போகாமல் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |