பூண்டு நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கணுமா? அப்போ இப்படி வைங்க
பொதுவாகவே சமையலில் முக்கியத்துவம் பெறும் பொருட்களுள் பூண்டுக்கென தனி இடம் இருக்கின்றது.
பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளைக் கொண்ட பூண்டு, நமக்கு அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
வைட்டமின் சி நிறைந்த, பூண்டு காய்ச்சல், சளி போன்ற நோய்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.
பல நோய்களை தீர்க்கும் அருமரந்தான பூண்டை நீண்ட நாட்கள் எப்படி கெடாமல் பாதுகாத்து வைத்திருக்கலாம் என்பது குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
எப்படி சேமித்து வைக்க வேண்டும்?
பொதுவாக பூண்டை உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். பூண்டை சூரிய ஒளி, வெப்பம் மற்றும் ஈரப்பதத்திலிருந்து தவிர்த்து நல்ல காற்றோட்டத்துடன் கூடிய உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்கலாம்.
மறந்தும்கூட பூண்டை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க கூடாது. காரணம் குளிர்சாதனப் பெட்டியில் பூண்டை வைப்பதால் அதன் சுவையில் மாற்றம் ஏற்படுவதோடு பூண்டு முளைவிடவும் ஆரம்பித்துவிடும்.
இதனால் பூண்டில் உள்ள மூலக்கூறுகள் மாற்றமடைந்து இதன் இயல்புத்தன்மை பாதிக்கப்படுகின்றது. காம்புகளை அகற்றாமல் பூண்டை ஒரு பேப்பரில் இறுக்கமாக கட்டி அறை வெப்பநிலையில் வைத்தால் அது ஆறு மாதங்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும்.
காம்புகளை நீக்கினால் அதில் அதிக காற்று உற்புகுந்து பூண்டு சுருங்க ஆரம்பித்து விடும். அதனால் காம்பு நீக்கிய பூண்டை ஒரு வாரம் அல்லது இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்தி விடுவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |