இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ கட்டாயம் உணவுக்கு பின் கராம்பு டீ குடிங்க..
பொதுவாகவே ஆயுள்வேத மருத்துவத்தில் கிராம்பு முக்கிய இடம் வகிக்கின்றது. சமையலில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தப்படும் கிராம்பில் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.
கிராம்பு டீ வெறும் மூலிகை டீ மட்டுமல்ல. இதில் நமக்கு தெரியாத பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவ்வாறு மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு டீ குடிப்பதை வழக்கப்படுத்திக்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கிராம்பு டீயின் நன்மைகள்
பல மருத்துவ பண்புகள் நிறைந்த கிராம்பு நம்முடைய செரிமானத்திற்கு உதவி செய்கிறது. மன அழுத்தத்தை போக்குகிறது. திடீரென ஏறும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் துணைப்புரிகின்றது.
கிராம்பு டீயில் நமது செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகள் நிறையவே உள்ளது. கிராம்பில் இயற்கையாகவே அமைந்துள்ள பல கலவைகள் ஒன்றிணைந்து, இதை வெதுவெதுப்பாக குடிக்கும் போது நமது செரிமானத்திற்கு உதவி செய்கிறது.
சாப்பிட்ட பிறகு ஏற்படும் அசௌகர்யத்தையும் கிராம்பு டீ குறைக்க உதவுகிறது. கிராம்பில் இயற்கையாகவே உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நமது சுவாசத்தை புத்துணர்ச்சி ஆக்குகின்றன. கிராம்பு டீயை குடிப்பதால் சாப்பிட்ட பிறகு வரக்கூடிய சுவாச துர்நாற்றம் நீங்குகிறது.
செரிமானப் பாதையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க கிராம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதவுகிறது.
ஆகையால் அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது காரமான உணவை சாப்பிட்ட பிறகோ, கிராம்பு டீயை குடித்தால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
கிராம்பை வாயில் போட்டு மெல்லுவதால் சிறந்த முறையில் இன்சுலினை பராமரிக்க முடியும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. சூடான கிராம்பு டீயை குடிப்பதால் நீடித்த ஆற்றல் ரத்த ஓட்டத்தில் சேர்கிறது.
இதனால் திடீரென ரத்த சர்க்கரை அளவு ஏறாமல் பராமரிக்க முடிகிறது. கிராம்பு டீயின் சுவை நம் மனதிற்கு இதமளிக்கிறது. இதனால் கவலை, பதட்டம், மன அழுத்தம் போன்றவற்றிற்கு கிராம்பு டீ சிறந்த தீர்வு கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |