ஒரு மாதமே ஆனாலும் இஞ்சி பூண்டு பேஸ்ட் கெடாமல் இருக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்!
காரசாரமான மசாலாவில் இஞ்சி பூண்டு பேஸ்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை ஒரு ஸ்பூன் சேர்த்து வதக்கினாலே அந்த குழம்பின் மணம் வீட்டை சுற்றி வரும். அப்படிப்பட்ட இஞ்சி பூண்டு பேஸ்டை பலரும் வீட்டில் இன்ஸ்டண்டாக பயன்படுத்த ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு தேவையானதை கெட்டுப்போகாமல் எப்படி வைத்துக்கொள்ளலாம் என்பதை பற்றி பார்ப்ப்போம்.
முதலில் நாம் 50 கிராம் இஞ்சி மற்றும் 250 கிராம் பூண்டு தோலுரித்து, அவற்றை நன்கு கழுவி, தண்ணீரில் உலர வைக்கவும்.
இப்போது மிக்ஸியின் ஜாடியில் இஞ்சியைப் போட்டு, அதனுடன் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக பேஸ்ட்டை தயார் செய்யவும்.
சனிப்பெயர்ச்சியின் ஆரம்பம்: இந்த 4 ராசிக்கு எப்படிப்பட்ட அதிர்ஷ்டம் உண்டாகும்?
பூண்டையும் அதே செயல்முறையில் அரைக்கவும். இஞ்சி மற்றும் பூண்டை தனித்தனியாக அரைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் இரண்டையும் தனித்தனியே ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொள்ளுங்கள்.
இத்தோடு அதன் மேல் இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெயைச் சேர்த்து கலக்கவும். இப்போது இந்த இரண்டு பேஸ்ட்களையும் தனித்தனி காற்று புகாத பெட்டிகளில் மூடி வைக்கலாம்.
அடுத்ததாக இஞ்சி பூண்டு சம அளவில் எடுத்துக்கொண்டு அதனோடு உப்பையும் சேர்த்து, அரைத்துக்கொள்ளுங்கள். இதோடு வினிகரை சேர்த்த்தால் நீண்ட நாட்கள் வரும்.
மேலும், இஞ்சி பூண்டுடன், எண்ணெய்யை சேர்த்துக்கொண்டால் நீண்ட நாட்கள் வரும்.
