Fake Loan apps : போலி கடன் செயலிகளை எவ்வாறு கண்டுபிடிப்பது? இந்த 5 அறிகுறிகளில் எச்சரிக்கை
நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் கடன் இல்லாமல் இருக்க வேண்டும் என நமது முன்னோர்கள் கற்றக்கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் தற்காலத்தில் கடன் வாங்குவது ஒரு கௌரவமாக செயலாக மாறிவருகின்றது.
அத்தியாவசிய தேவைகளுக்கு கடன் வாங்கிய காலம் போய், இப்போதெல்லாம், விருப்பப்பட்ட பொருளை வாங்க கையில் காசு இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது வாங்கி விடும் மனோபாவத்தில்தான் பலரும் இருக்கிறார்கள்.
மேலும் பல தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டு கடன் வசதியை வழங்குகின்றன. நிதி சேவை நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு விரைந்து கடன் கொடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
தற்போது மொபைல் ஆப்ஸ் மூலம் தனிநபர் கடன் பெறுவது மிகவும் சாதாரண மற்றும் எளிமையான விடயமாக மாறிவிட்டது. அதனால் வீட்டில் இருந்துக்கொண்டே சில கிளிக்களில், வங்கிக்குச் செல்லாமலேயே கடன் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
போலி லோன் ஆப்கள்
அந்த வகையில் தற்போது விரைவாக கடன்கள் வழங்கும் உடனடி கடன் செயலிகள் (இன்ஸ்டன்ட் லோன் ஆப்ஸ்) மிகவும் பிரபலமாகி வருகிறது.
குறைந்த ஆவணங்களை சமச்ப்பித்து, விரைவான ஒப்புதல் மற்றும் உடனடியாக கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடிகின்றது என்ற காரணங்களால் உடனடி கடன் ஆப்ஸ் பிரபலமாகி வருகிறது. ஆனால் அதில் பெரும்பாலான செயலிகள் மோசடி செயலிகளாக தான் இருக்கின்றது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.
ஆனால் கடன் உடனடியாக கிடைக்கிறது என்ற ஆர்வத்தில் சிலர் மோசடியான கடன் செயலிகளில் கடன் பெற விண்ணப்பித்து விட்டு சிலர் தங்களது பணம், டேட்டாவை இழப்பதோடு நிம்மதியையும் இழந்து, மன அழுத்தத்தில் உள்ளனர்.
ஆன்லைன் சந்தையில் பெருகிவரும் பல கட்டுப்பாடற்ற கடன் செயலிகள் உள்ளன, அவை மறைமுக கட்டணங்களை வசூலிக்கலாம், உங்கள் தரவுகளை தவறாக பயன்படுத்தலாம் அல்லது அதனை வைத்து உங்களிடம் பணம் பறிக்க முயற்சிக்கலாம்.
அல்லது கடனை திருப்பிச் செலுத்த தாமதமானால் உங்களை துன்புறுத்தலாம். இதனால் பல ஆபத்துகளையும், பின் விளைவுகளையும் சந்திக்க நேரிலாம். எனவே ஒரு டிஜிட்டல் கடன் செயலியை பயன்படுத்துவதற்கு முன்னர் நிச்சயம் பின்வரும் அறிகுறிகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
எச்சரிக்கை அறிகுறிகள்
நீங்கள் கடன் பெறுவதற்காக தெரிவு செய்த ஆப் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டதா என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். முதலில், அந்த ஆப் RBI (ரிசர்வ் வங்கி ஆப் இந்தியா) அங்கீகரித்த வங்கி அல்லது NBFC (நான்-பேங்கிங் நிதி நிறுவனம்) உடன் இணைக்கப்பட்டதா என்பதை அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
போலி ஆப்ஸ் பெரும்பாலும் இந்த இரண்டு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டவையாக இருக்காது. எனவே, லோன் ஆப் குறித்து RBI இணையதளத்தில் சென்று கடன் வழங்கும் நிறுவனத்தின் பெயரை சரிபார்க்கவும். அங்கு இல்லை என்றால் அவை போலி லோன் செயலியாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
கட்டணங்கள் பற்றிய விபரங்கள் தெளிவற்றதாகவோ அல்லது மறைக்கப்பட்டதாகவோ இருக்கின்றதா என்பதை அவதானிக்க வேண்டும். நம்பகமான கடன் ஆப், வட்டி விகிதம், கடன் காலம், செயலாக்க கட்டணம், தாமத கட்டணம் மற்றும் மொத்த திருப்பிச் செலுத்தும் தொகை பற்றி தெளிவாக தகவலை வழங்கவில்லை என்றால் இது போலி செயலியாக இருக்கலாம்.
கடன் செயலியானது அதிகப்படியான அனுமதிகளை கோருகிறதா? போலி கடன் ஆப்ஸ் பெரும்பாலும் உங்கள் காண்டாக்ட்ஸ், புகைப்படங்கள், இருப்பிடம், கேமரா அல்லது மைக்ரோஃபோன் அணுகலை கோரும். இது கடனைப் பெறுவதற்குத் தேவையில்லை, ஆனால் தாமதமானால் உங்களை மிரட்ட பயன்படுத்தப்படலாம். எனவே கடன் விண்ணப்பிக்கும் போது PAN, ஆதார் போன்ற அடிப்படைத் தகவல்களை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கவும்.இது குறித்து மிகுந்த எச்சரிக்கை தேவை.
அந்த செயலி தொடர்பில் மோசமான விமர்சனங்கள் அல்லது புகார்கள் உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆப் மீது குறைந்த ரேட்டிங், பல புகார்கள் அல்லது தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருந்தால், அது நம்பகமற்றது என்பதற்கான முக்கிய அறிகுறியாகும் . நீங்கள் பயன்படுத்த விரும்பும் செயலி குறித்து Google Play Store/App Store-ல் விமர்சனங்களைப் நிச்சயம் அவதானிக்க வேண்டும்.
கடன் செயலியில் வாடிக்கையாளர் உதவி இல்லையா? ஒரு நம்பகமான கடன் ஆப்பில் கஸ்டமர் கேர் எண், மின்னஞ்சல் அல்லது புகார் முறை நிச்சயம் இருக்க வேண்டும். ஆனால் போலி ஆப்ஸில் இவை இருக்காது. இந்த அறிகுறிகள் இருந்தால், குறித்த கடன் செயலி போலியானதாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். பாதுகாப்பை உறுதி செய்துக்கொள்ள வேண்டும் என்றால், அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள் இல்லாத செயலிகளை பயன்படுத்துவதை தவிக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |