பேரழகியாக ஜொலிக்கணுமா? அப்போ இனி மாதுளை சாப்பிட்டு தோலை தூக்கி வீசாதீங்க!
பொதுவாக பழங்கள் சரும ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
இதன்படி, மாதுளை பழத்தை தினமும் உடலில் சேர்த்து கொண்டால் உடலில் ரத்தம் உற்பத்தி அதிகமாகும். அத்துடன் உடலின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
அதே சமயம், மாதுளையில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ சத்துக்கள் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
மாதுளை பழங்களை போல் அதன் தோலிலும் அதிகப்படியான சத்துக்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பழத்தை சாப்பிட்ட பின்னர் தோலை தூக்கி ஏறியாமல் மாதுளம் தோலை அழகை மெருகூட்ட பயன்படுத்தலாம்.
மாதுளம் பழம் தோலை வைத்து எப்படி சருமத்தை பாதுகாக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தோலை எப்படிப் பயன்படுத்துவது ?
1. தோலை எடுத்து நன்றாக வெயிலில் காய வைத்து அரைத்து பொடியாக எடுத்து கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி சர்க்கரை கலந்து கொள்ளவும்.
2. அதனுடன் தேன், உங்கள் பிடித்தமான ஏதாவொரு எண்ணெய் போட்டு நன்றாக கலந்து விடவும்.
3. முகத்தை நன்றாக கழுவி விட்டு தயாரித்த மாதுளம் பழ ஸ்கரப்பை முகம் முழுவதும் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும்.
4. சரியாக 15 நிமிடங்கள் வரை காய விட்டு, பின்னர் தண்ணீரில் கழுவினால் மென்மையான சருமம் கிடைக்கும்.
5. மாதுளம் பழ தோலில் செய்யப்பட்ட ஸ்க்ரப்பிங் பயன்படுத்திய பின்னர் டோனர் மற்றும் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த மறக்காதீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |