ஊற வைத்த அரிசி நீரை வீணடிக்கிறீங்களா? பல பயன்களை கொடுக்குமாம்
அரிசி ஊற வைத்த தண்ணீரை வெளியே கொட்டாமல் அதனை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான வீடுகளில் அரிசி ஊற வைத்த தண்ணீரை கீழே ஊற்றி வீணடித்து விடுவார்கள். ஆனால் இவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லைாயம்.
ஆம் அரிசி கழுவும் தண்ணீரை வைத்து நாம் பலவிதமான நன்மைகளை பெற முடியும். அது என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அரிசி கழுவும் தண்ணீரின் பயன்கள்
அரிசி ஊற வைத்த நீரை நாம் சமையலுக்கு பயன்படுத்த முடியும். ஆம் பருப்பு வகைகள் செய்யும் பொழுது அதில் சிறிதளவு இனிப்புச் சுவை தேவை என்றால் இதனை பயன்படுத்தலாம். அது போன்று பருப்பை வேக வைப்பதற்கு இந்த தண்ணீரை பயன்படுத்தி வேக வைக்கலாம்.
மேலும் காய்கறிகளை வேக வைப்பதற்கு அரிசி ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தி வேக வைக்கலாம். இவை பிரத்யேகமான சுவையை அளிப்பதுடன், ஊட்டசத்தையும் அளிக்கின்றது.
முடி உதிர்தல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது. தலைக்கு குளித்த பின்பு அரிசி ஊற வைத்த தண்ணீரை வைத்து முடியை அலசினால் கூந்தல் பளபளப்பாக மாறுவதுடன், மென்மையாகவும் காணப்படுகின்றது.
Image: Shutterstock
சுத்தமான அரிசி ஊற வைத்த நீரை நாம் சூப் செய்ய கூட பயன்படுத்தலாம். இதில் இருக்கும் ஸ்டார்ச் மற்றும் மினரல் சத்துகள் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸை கூட்டி, சுவையை அதிகரிக்கும். இதை, குழம்புக்காக கூட உபயோகிக்கலாம்.
அரிசி ஊற வைத்த தண்ணீரை வைத்து முகத்திற்கு டோனரை செய்யலாம். முகத்தில் உள்ள துளைகள் மூடுவதற்கும், முகம் வீங்கியது போன்று இருப்பதையும் குறைக்கின்றது. இந்த நீரில் வெறும் பஞ்சை வைத்து நனைத்து அதனை முகத்தில் தேய்த்தாலே போதும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |