சண்டை வந்தாலும் கணவன் மனைவி உறவு பலமாக இருக்கணுமா? இதை செய்தாலே போதும்
பொதுவாகவே கணவன் மனைவிக்கு இடையில் சண்டை வருவதும் பின்னர் சமாதானம் ஆவதும் மிகவும் இயல்பான விடயம் தான். ஆனால் சில சமயங்களில் சிறிய வாக்குவாதங்கள் கூட விவாகரத்து வரை சென்றுவிடுகின்றது.
திருமண உறவில் எவ்வளவு சண்டை வந்தாலும் உறவு ஆழமாக வேண்டுமே தவிர இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட காரணமாக இருக்க கூடாது.

இவ்வாறு எவ்வளவு சண்டை வந்தாலும் கணவன் மனைவிக்கு இடையில் உறவு பலமாக இருக்க வேண்டும் என்றால் முக்கியமாக பின்பற்ற வேண்டிய விடயங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
திருமண உறவை பலப்படுத்தும் Tips
திருமண உறவில் கணவன் மனைவிக்கு இடையில் வாக்குவாதம் வருவதற்கு முக்கிய காரணம் ஒருவர் செய்யும் தவறை இன்னொருவர் சுட்டிக்காட்டும் பட்சத்தில் அதனை ஒத்துக்கொள்ளாமல் இருப்பது தான்.

மனிதர்களாக பிறந்த அனைவருமே தவறு செய்வது மிகவும் இயல்பான விடயம் தான். அதனை திருத்திக்கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை எனவே தவறுகளை ஒத்துக்கொள்வதும் திருத்திக்கொள்ள முயற்சிப்பதும் ஒரு திருமண பந்தத்தை மிகவும் வலுவாக்க துணைப்புரியும்.
கணவன் அல்லது மனைவி தவறு செய்யும் போது குற்றம் சுமத்துவதை தவிர்த்து அன்பாக புரிய வைக்க முயற்சிப்பது சிறந்த திர்வை கொடுக்கும்.

கணவன் மனைவிக்கு இடையில் நிச்சயம் ஒரு தனிப்பட்ட சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம். ஒருவருக்கொருவர் இந்த தனிப்பட்ட இடைவெளியை எப்போதும் கொடுத்தால் எவ்வளவு சண்டை வந்தாலும் இந்த உறவு பிரிவதற்கு வாய்ப்பே இருக்காது.
பொதுவாக கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்படும் பெரும்பாலான சண்டைகளுக்கு முக்கிய காரணம் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது தான். அதனை தவிர்க்கும் திருமண உறவு எப்போதும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையில் மனஸ்தாபம் ஏற்படும் பட்சத்தில் அதனை பெரிதுப்படுத்தாமல் அந்த உறவுக்கு முக்கியத்தும் கொடுக்க கற்றுக்கொண்டால் பிரச்சினைகள் சாதாரணமாக மாறிவிடும்.
சிறிய சண்டைகளை அப்படியே மனதில் வைத்துக்கொண்டு ஆழமாக சிந்திக்காமல் சாதாரணமாக எடுத்துக்கொண்டால் இந்த உறவில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது.

வீட்டு வேலைகளை மனைவி தான் செய்ய வேண்டும் வேலைக்கு செல்வது கணவனுக்கே உரித்தான கடமை என்று பழைய பஞ்சாங்கத்தை பின்பற்றாமல் இருவரும் சமம் என கருதும் மனபான்மை இருவருக்கும் இருக்க வேண்டும்.
இருவருமே அடிப்படையில் மனிதர்கள் என்ற பரஸ்பர புரிந்துணர்வு இருந்தாலே போதும் எந்த சூழ்நிலையிலும் அந்த கணவன் மனைவி உறவு பலமாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        