உங்கள் உதடு வறண்டு போய் காணப்படுகிறதா? இனி கவலைய விடுங்க
Skin Care
By Sinduja
அழகை எடுத்துக் காட்டுவதில் உதடுகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஒரு சிலருக்கு இயற்கையாகவே உதடுகள் ரோஜா நிறத்தில் காணப்படும்.
ஆனால் ஒரு சிலருக்கு உதடுகள் கருப்பு நிறத்தில் அல்லது வறண்டு வெடிப்பு ஏற்படுவதை பார்த்திருப்போம்.
இதை சரி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால் முக அழகில் உதடுகளுக்கு மிகப்பெரிய பங்குள்ளது.
image - touch of mink
அந்த உதட்டு வெடிப்பை எவ்வாறு சரி செய்யலாம் எனப் பார்ப்போம்.
- உதடு சொரசொரப்பாக வறட்சியாக இருந்தால், சர்க்கரையுடன் தேன் சேர்த்து லேசாக தேய்த்தால் உதடு மென்மையாகிவிடும்.
- தினமும் இரவில் படுக்கச் செல்வதற்கு முன்னர் வெண்ணெய் கொஞ்சம் எடுத்து உதட்டில் தடவிக்கொண்டு உறங்கச் செல்லவேண்டும். இதனால் நமது உடலில் ஏற்பட்டுள்ள உஷ்ணம் குறையும். உதடுகள் தானாகவே வறண்டு போகாது அல்லது காய்ந்து போகாமல் இருக்கும்.
- வெண்ணெயை அடிக்கடி சாப்பிடுவதும் சிறந்தது.
- அதுமட்டுமில்லாமல் உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு நமது உடல் உஷ்ணமும் ஒரு வகையில் காரணமாக இருக்கின்றது. இதனால் ஒரு சிலர் நாவால் வருடி உதட்டை ஈரமாக்குவார்கள். நாவால் வருடி உதட்டை ஈரமாக்குவதை விட உடல் சூட்டைக் குறைக்கும் மோரை அடிக்கடி பருகி வரலாம்.
- இயற்கையான லிப் பாம்களை உபயோகிக்கிலாம்.
- எலுமிச்சையையும் சர்க்கரையையும் சேர்த்து உதட்டில் பூசி வரலாம்.
image - everyday health
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US