குளிர்காலத்தில் சரும வறட்சியில் இருந்து தப்பிக்க வேண்டுமா?
பொதுவாக குளிர்காலத்தில் சருமம் வறட்சியடைந்து, ஒவ்வாமை அரிப்பு, போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதை எப்படி இயற்கையான முறையில் சரிசெய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்பொம்.
சரும வறட்சிக்கு, வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கையான மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்துவது நல்ல பலனை தரும். அடுத்ததாக, அழகுசாதனப் பொருட்களை தவிர்த்து, லிப் பாம்கள் மற்றும் ஹைட்ரேட்டிங் ஃபவுண்டேஷன் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
மேலும், குளிர்காலத்தில் வீட்டில் தயாரிக்கப்படும் டோனர்கள் மற்றும் ஸ்க்ரப்களை பயன்படுத்துவது சருமத்திற்கு நல்லது. வறண்ட சருமம் உடையவர்கள் பால் பவுடர் , கிளிசரின், மற்றும் எலுமிச்சை சாறு இவற்றை ஒன்றாக கலந்து சருமத்தில் பயன்படுத்தலாம்.
இதனை இரண்டு முறை பயன்படுத்தலாம். வாழைப்பழ பேஷியல் செய்தால் சருமத்திற்கு நல்ல பலனைக்கொடுக்கும். அதனை பயன்படுத்தும் முறையாக, ஒரு பவுலில் வாழைப்பழங்களை நன்றாக மசித்து, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசிக்கொண்டு 30 நிமிடங்கள் அப்படியே இருக்கவும்.
அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். மேலும், முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து அதை நன்றாக அடித்து முகத்தில் பூசிக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
இதனால் சரும வறட்சி நீங்கும்.
ஒரு பவுலில் எலுமிச்சை சாறு கலந்து தேனுடன் அதை மிக்ஸ் செய்து, முகத்தில் அப்ளை செய்யவும். 15 நிமிடத்திற்கு பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவினால் போதும். வாரம் மூன்று முறை செய்து வந்தால் போதும் சரும வறட்சி நீங்கும்.