சட்டையில் விடாப்பிடியான மை கறையா?… வீட்டில் இருக்கும் இந்த பொருள் போதும்
துணிகளில் காணப்படும் பேனா மை கறையை எவ்வாறு வீட்டில் இருக்கும் பொருளை வைத்து சரிசெய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பள்ளி செல்லும் குழந்தைகள் தாங்கள் எழுதுவதற்கு பயன்படுத்தும் பேனாவிலிருந்து மை வெளியேறி அது சீருடையையும் கறையாக்கி விடும்.
இதனால் அந்த சீருடையை மீண்டும் பயன்படுத்தாத நிலைக்கு செல்கின்றது. அவ்வாறு இல்லையெனில் அந்த கரை அப்படியே இருக்கின்றது.
இதனை வீட்டில் பொருட்களை வைத்து சுலபமாக எவ்வாறு போக்குவது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எப்படி செய்வது?
பழைய டூத் ப்ரஷ் இருந்தால் அதில் டூத் பேஸ்ட்டை எடுத்துக் கொள்ளவும். கறை படிந்த துணிப் பகுதியில் மெதுவாகவும், உறுதியாகவும் தேய்க்கத் தொடங்கவும்.
ஒரு ஐந்து நிமிடம் தேய்த்தால் கறை படிப்படியாக மறையத் தொடங்குவதை கண்கூடாக பார்க்கலாம். பின்பு அந்த துணியை வழக்கமாக துவைப்பது போன்று துவைக்கவும்.
கறை முற்றிலும் மறைந்து, ஆடை சுத்தமாகி இருப்பதை பார்க்கலாம். துவைத்த பிறகு, துணியை வெயிலில் உலர்த்தி, இஸ்திரி செய்தால், கறை இருந்ததற்கான தடயமே இருக்காது.
உங்கள் வீட்டில் டூத்பேஸ்ட் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம்! கறையை நீக்க டெட்டால் திரவத்தையும் பயன்படுத்தலாம். டெட்டால் சில துளிகளை கறையின் மீது விட்டு தேய்த்தாலும் கறை நீங்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |