56 வயதிலும் ஜொலிக்கும் நதியா! இரவு தூங்கும் போது இதை மட்டும் செய்தால் போதுமாம்
ஒரு காலகட்டத்துக்கு மேல் இளமையாக இருத்தல் என்பது எட்டாக் கனியாகி விடுகிறது. அதற்கு நாம் உண்ணும் உணவு, சருமத்தை பராமரிக்கும் முறை, மன அழுத்தம் போன்றன காரணமாக அமைந்துவிடுகிறது.
ஆனால், அன்று பார்த்ததைப் போலவே இன்று வரையில் இளமையாக இருக்கும் நடிகை என்றால், அது நதியா தான்.
நதியாக மட்டும் எவ்வாறு இவ்வளவு இளமையாக இருக்கின்றார் என்று அனைவரும் வியந்ததுண்டு. இதற்கு மிக முக்கிய காரணமாக விளங்குவது அவர் சருமத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவமாக இருக்கலாம்.
நிறைய பேருக்கு தங்கள் முகத்தில் ஏற்பட்டிருக்கும் கரும்புள்ளிகளை எவ்வாறு போக்கலாம் என்று தெரியாமல் இருக்கும். அதற்காக என்னவெல்லாமோ செய்வர்.
இந்நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்திலுள்ள கரும்புள்ளிகளை எவ்வாறு போக்கலாம் எனப் பார்ப்போம்.
கீழுள்ள அழகுக் குறிப்புகள் முகத்திலுள்ள கரும்புள்ளிகளை போக்க மிகவும் உதவும்.
image - dabur honey
1ஆவது டிப்ஸ் - சமையலுக்கு பயன்படும் பட்டையை எடுத்து அதை பொடியாக அரைத்துக்கொண்டு அதனுடன் தேனைக் கலந்து கரும்புள்ளிகள் மீது அதைத் தடவிவிட்டு, உறங்கச் செல்லுங்கள். காலையில் எழுந்தவுடன் அதை சாதாரண தண்ணீரிலோ அல்லது குளிர்ந்த தண்ணீரிலோ கழுவிக்கொள்ள வேண்டும்.
2 ஆவது டிப்ஸ் - கொத்தமல்லியை நன்றாக அரைத்து, அதனுடன் பால், முகத்துக்கு தடவும் மஞ்சள் சேர்த்து ஒரு கலவையாக்கி இதை முகத்துக்கு தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்ததன் பின்னர் 20 நிமிடங்கள் வரையில் ஊறவைத்து கழுவி விட வேண்டும்.
image - mantracare
3ஆவது டிப்ஸ் - முள்ளங்கிச் சாறுடன் ப்ரெஷ்ஷான கற்றாழை ஜெல்லைக் கலந்து, முகத்தில் பூச வேண்டும்.
image - you tube
4ஆவது டிப்ஸ் - உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் வெள்ளரிக்காய், பச்சை பால், தேன் சேர்த்து கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்களின் பின்னர் கழுவிக்கொள்ள வேண்டும்.
image - 100%pure
5ஆவது டிப்ஸ் - க்ரீன் டீ இலைகளை எடுத்து சுடுநீரில் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டதன் பின்னர் அந்த இலையை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இலைகள் நன்றாக ஆறியதன் பின்னர், அதனை மிக்சியில் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பின்னர் அதனுடன் வெள்ளரிக்காய் ஜூஸ் சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் அனைத்தும் படிப்படியாக குறையும்.