எமனாக மாறும் இதய நோயை தடுக்க என்ன செய்யணும் தெரியுமா?
உலகில் இருக்கும் அநேக நபர்கள் உயிரிழப்பதற்கு முக்கிய காரணமாக இதய நோய் இருக்கின்றது.
இந்த நோய் மோசமான உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகின்றது. அத்துடன் இதய நோய் வருவதற்கான சில நோய்களும் காரணமாக இருக்கலாம்.
அந்த வகையில், உயர் இரத்த அழுத்தம், உயர் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (எல்டிஎல்) கொழுப்பு, நீரிழிவு, புகைபிடித்தல், உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் செயலற்ற தன்மை ஆகிய காரணங்களாலும் இதய நோய் வரலாம்.
இது போன்ற அபாயத்தை எப்படி ஆரோக்கியமான முறையில் குறைப்பது என பலரும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
அப்படியானவர்கள் இதய நோயை எப்படி கட்டுபடுத்துவது? என்ன மாதிரியான பழக்கங்களால் ஆரோக்கியமாக வாழலாம்? என்பதை தொடர்ந்து பதிவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
இதய ஆரோக்கியம்
1. எப்போதும் ஊட்டசத்து நிறைந்த உணவுகளையும், பழங்களையும் எடுத்து கொள்வது அவசியம். துரித உணவுகளுக்கு வசப்படுவதை குறைப்பது சிறந்தது.
2. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட நட்ஸ்கள் மற்றும் மீன் வகைகள் ஆகியற்றை எடுத்து கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
3. வாரத்திற்கு 150 நிமிடங்கள் சரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உடல் இயக்கத்தை சீர்ப்படுத்தி இதயத்தை பாதுகாக்கின்றது. இதனால் இரத்த குழாய்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
Image - FatCamera, Getty Images
4. புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகிய பழக்கங்கள் இரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவை குறைக்கின்றது. இதனால் இதயம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கின்றது.
5. என்ன நடந்தாலும் மனதை ஆரோக்கியமாக வைத்து கொள்வது சிறந்தது. மன அழுத்தம் அதிகரிக்கும் பொழுது இதயத்தில் பிரச்சினை வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை காரணமாக முடிந்தவரை மன அழுத்தம் பிரச்சினையை கட்டுபடுத்தலாம்.
6. அதிக எடை உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளை ஏற்படுத்தும். இது இதயத்தை பாதிக்க வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது.
7. 30 வயதை தாண்டியவர்கள் அடிக்கடி கொலஸ்ரோலை பரிசோதிப்பது சிறந்தது. இது மாரடைப்பு போன்ற நோய்களை தடுக்க உதவியாக இருக்கும். அடர்த்தியான கொழுப்புக்கள் கொண்ட உணவுகளை சாப்பிடுவதை குறைப்பது நல்லது. முடிந்தவரை காய்கறிகள், பழங்கள் எடுத்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |