கடகடனு தொப்பையை குறைக்கனுமா? அப்போ இந்த விதைகள் பற்றி தெரிஞ்சிக்கோங்க
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களின் பிரச்சினையாக காணப்படுவது உடல் எடை அதிகரிப்பு தான் இதனால் உடல் ரீதியாக அசௌகரியங்களை எதிர்நோக்குவது மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
தற்காலத்தில் ஆண்கள் பெண்கள் என இருபாலாரும் பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கின்றனர். இதற்கிடையில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருந்த போதிலும் அதற்காக நேரம் ஒதுக்குவது கடினமானதாகவே அமைகின்றது.
இப்படிப்பட்டவர்கள் உணவு கட்டுப்பாட்டின் மூலமே எடையை குறைக்க முடியும்.பயனுள்ள எடை இழப்பு உணவுகள் என்று கூறப்படும் பல உணவுப் பொருட்கள் உள்ளன. பொதுவாக நாம் உண்ணும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விதைகளில் எந்தப் பயனும் இல்லை என கருதி நாம் அனைவரும் எப்போதும் தூக்கி எறிந்துவிடுகிறோம்.
ஆனால், விதைகளில் அளப்பரிய மருத்துவ பலன்கள் நிறைந்து காணப்படுக்கின்றன. சில விதைகள் எடை இழப்பை ஊக்குவிப்பதில் பாரிய பங்கு வகிக்கின்றது. இந்த வகையில் எடை இழப்பு பயணத்திற்கு பயனுள்ள ஆரோக்கியமான விதைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆளி விதை
ஆளி விதையில் நார்ச்சத்துக்கள் மிகவும் அதிகம். பொதுவாகவே நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது உடல் எடை லேசாக இருக்கும். அத்தோடு நாம் எடுத்துக் கொள்ளும் கலோரிகள் இயல்பாகவே குறைந்துவிடும். இதனால் பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.
பூசணி விதை
பூசணி விதைகளில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் நிறைவுறா கொழுப்புகள் போன்றவை உள்ளன. இவை கலோரிகளை எரிக்க பெரிதும் உதவுகின்றன. தாதுக்கள் நிறைந்த பூசணி விதையில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகளும் உள்ளன. இவை எடை குறைக்க பெரிதும் கைக்கொடுகின்றன.
சியா விதை
சியா விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை நீங்கள் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், விரைவாக உடல் எடையை குறைக்கலாம். சியா விதைகளை உட்கொள்வது செரிமானத்தை மெதுவாக்குகிறது, இது இரத்தத்தில் குளுக்கோஸ் வெளியீட்டை தாமதப்படுத்தும். சியா விதைகள் உடலின் வளர்சிதை மாற்றத்தில் உதவுகிறது.
சூரியகாந்தி விதை
சூரியகாந்தி விதைகள் சூரியகாந்தியின் பழங்கள் ஆகும், அவற்றில் ஒலிக் மற்றும் லினோலிக் அமிலத்தில் ஏராளமாக உள்ளன மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சோடியத்தில் குறைவாக உள்ளன. அதனுடன், சூரியகாந்தி விதைகள் நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும், அவை உங்கள் எடை இழப்புக்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |