பெண்கள் தேங்காய் உடைக்க கூடாததற்கு இது தான் காரணமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே சுப நிகழ்ச்சிகளில் தேங்காய் உடைக்கும் பழக்கம் இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு தேங்காய் உடைப்பது சுபகாரியங்களுக்கு மட்டுமல்லாது அசுப காரியங்களுக்கும் உடைப்பார்கள். இவ்வாறு தேங்காய் உடைப்பதற்கு பல காரணங்கள் உண்டு. தேங்காய் மனித உடலின் பிரதிபலிப்பு என்றும் முன்னோர்கள் கூறிவைத்திருக்கின்றார்கள்.
தேங்காயை உடைப்பதால் கர்வம் அழிந்து ஆன்மா சுத்தமாகும் என்பது ஐதீகம். அதாவது சுப நிகழ்வுகளில் தேங்காய் உடைப்பது வரப்போகும் தடைகள் எல்லாம் தகர்ந்து சிதறிப் போக வேண்டும் என்பதற்காகவும் உடைப்பார்கள்.
ஆனால் நீங்களே பார்த்திருப்பீர்கள் சாமி பூஜைகளின் போது பெண்கள் தேங்காய் உடைக்க மாட்டார்கள். இதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காரணம் தெரியுமா?
பெண்கள் ஏன் தேங்காய் உடைக்க கூடாது அதாவது தேங்காய் ஒரு விதை என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.
அதுபோல பெண் தான் கருவில் சுமக்கும் குழந்தையும் ஆரம்பத்தில் விதை போல இருப்பதால் பெண்கள் தேங்காய் உடைக்கும் போது அது அப்பெண்ணுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவதோடு கருப்பையிலும் எதிர்மறையான தாக்கம் ஏற்படும்.
மேலும், தேங்காயானது லட்சுமி தேவிக்கு மட்டும் உரித்தானது என்பதால் பெண்கள் தேங்காயை உடைக்க கூடாது என்று சொல்வார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |