உங்களது பற்கள் எந்த வகையைச் சேர்ந்தது? வாழ்வில் அதிர்ஷ்டம் ஏற்படுமாம்
முகத்திற்கு அழகு சேர்ப்பதில் பற்களுக்கு மிகப்பெரிய பங்குள்ள நிலையில், அதன் வடிவத்தை வைத்து நமது அதிர்ஷ்டத்தை தெரிந்து கொள்ளமுடியுமாம்.
ஆம் சதுரம், செவ்வகம், நீள் வட்டம் மற்றும் முக்கோண நான்கு வகைகளாக பிரிக்கப்படும் நிலையில், பற்கள் வெள்ளை நிறத்தில் இருப்பது நமது தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்கிறது. தற்போது பற்களின் வடிவத்தை வைத்து அதிர்ஷ்டத்தை தெரிந்து கொள்ளலாம்.
கூர்மையான பற்கள்: கூர்மையான பற்களை கொண்டவர்கள் அதிக புத்திசாலிகளாகவும், அதிக சுறுசுறுப்பானவர்களாகவும் இருப்பதுடன் வாழ்வில் பல தடைகளையும் முறியடிப்பவர்களாகவும் இருப்பார்கள். கணிதத்தில் சிறந்து விளங்கும் இவர்கள் அதிகமான பிடிவாத குணம் கொண்டதுடன், தொடங்கும் தொழில் வெற்றியை தட்டிச் செல்பவர்களாகவும் இருப்பார்கள்.
குவிந்த பற்கள்: குவிந்த பற்களை உடையவர்கள் மிகவும் ஆளுமை உடையவர்களாக இருப்பதுடன், மற்றவர்களை தனது பேச்சினால் கட்டுக்குள் வைக்கும் எண்ணம் கொண்ட, இவர்களால் சின்ன சின்ன ஏமாற்றங்களை கூட தாங்கி கொள்ள முடியாத இவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
குழி போன்ற பற்கள்: குழி போன்ற பற்கள் உடையவர்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை உண்டு பண்ணுவதோடு, பெரும்பாலும் தோல்களையே சந்திப்பார்கள். இந்த பற்களைக் கொண்டவர்கள் முடிந்த அளவு அறுவை சிகிச்சை செய்து சரிசெய்துவிடுவது நல்லது.
சீரற்ற பற்கள்: இந்த பற்கள் கொண்டவர்கள் அதிக அளவு பேராசைக் குணம் கொண்டவர்களாகவும், மற்றவர்களை எளிதில் கணிப்பவர்களாகவும், சுயநலவாதிகளாக இருப்பதுடன், மற்றவர்களுக்கு ஏற்ப நடந்து கொள்வதுடன், எளிதில் மற்றவர்களை காயப்படுத்தவும் செய்துவிடுவார்களாம்.
கும்பலான பற்கள்: இம்மாதிரியான பற்களைக் கொண்ட இவர்கள், நேர்மை குணம் கொண்டவர்களாகவும், கற்பனைத் திறனும், ஆக்க பூர்வமான சிந்தனையும் அதிகம் கொண்டவர்களாகவும், எந்த ஈகோவும் இன்றி மற்றவர்களுடன் எளிதில் பழகக்கூடியவர்களாக இருப்பார்கள். புதிய சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் நண்பர்களை எளிதாக உருவாக்குவார்கள்.
பற்களை விட ஈறுகள் அதிகமிருப்பது: பற்களை விட ஈறுகள் அதிகமிருப்பவர்கள் குடும்ப உறவுகளில், நல்ல உணர்ச்சி பிணைப்பை வெளிப்படுத்தாத இவர்கள், நண்பர்கள் மீது அதிக பாசத்துடன் இருப்பார்கள். பொதுவாக சீரற்ற வாய்வழி அமைப்பு உள்ளவர்கள் அதிகம் பொய் கூறுவார்கள் என்பதால் இவர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.