காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்க!
முகம் மற்றும் கைகளின் அழகை மேம்படுத்துவதில் அதிக சிரமம் எடுத்துக் கொள்பவர்கள், கால்களை பெரிதாக கவனிப்பதில்லை. கால் தானே யார் பார்க்கப் போகிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்குள். மேலும் சிலர் கால்களை பெரிதாக கவனிப்பதில்லை.
நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் பார்க்கப் போனால் நமது முழு உடலையும் தாங்குகின்ற உறுப்பென்றால் அது கால்கள் தான். அவ்வாறானால், அந்த கால்களை நாம் எவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
காலில் ஏற்படும் பிரச்சினைகளுள் முக்கியமானது பித்தவெடிப்பு. இந்த பித்தவெடிப்பானது கால்களின் அழகையே கெடுத்துவிடும்.
பித்தவெடிப்பை எவ்வாறு இல்லாமல் செய்யலாம்...
குளிக்கும்போது அழுக்கு தேய்த்து குளிக்காமல் இருத்தல், குதிகாலில் அழுக்கு சேர்வது போன்றவற்றால் பித்தவெடிப்பு ஏற்படும்.
செருப்பு அணியாமல் இருப்பவர்களுக்கும் கரடு முரடான பாதையில் நடப்பவர்களுக்கும் காலில் பித்தவெடிப்பு வரலாம். தரமற்ற பாதணிகள் அணிவதும் பித்த வெடிப்புக்கு ஒரு காரணமாக அமைகிறது.
வெளியிடங்களுக்குச் சென்று வீடு திரும்பியதும் கால்களை நன்றாக கழுவ வேண்டும்.
வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாவற்றையும் தொடர்ந்து செய்யும்போது பித்தவெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
அப்படியும் குறையவில்லையென்றால் மருத்துவரை நாட வேண்டும்.