WhatsApp பில் Delete செய்யப்பட்ட செய்தியை பார்ப்பது எப்படின்னு தெரியுமா?
தற்காலத்தில் அனைத்தும் தெழில்நுட்ப மயமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சமூகவளைத்தளங்களில் தான் கண்விழிக்கின்றார்கள் என்றால் மிகையாகாது.
அந்த வகையில் வாட்ஸ் அப் செயலியை தினமும் நாம் பயன்படுத்தினாலும் அதில் நமக்கு தெரியாத ஏராளமான விடயங்கள் இருக்கவே செய்கின்றன.
WhatsApp இல் இருந்து Delete செய்யப்பட்ட செய்தியை எப்படி பார்ப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒருவர் உங்களுக்கு WhatsApp இல் ஒரு தகவலை அனுப்பிவிட்டு, அதை Delete செய்துவிட்டாலும், அந்த தகவலை நீங்கள் எளிதான முறையில் படித்துவிடலாம்.
ஆனால், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த வசதி காணப்படுகின்றது. ஐபோன் பயன்படுத்துவோருக்கு இவ்வாறான தெரிவு போனில் காணப்படுவது கிடையாது.
அது மட்டுமன்றி இந்த முறையின் மூலம் எழுத்து வடிவிலான செய்திகளை மட்டுமே படிக்க முடியும். புகைப்படங்கள் அல்லது காணொளிகளை இவ்வாறு மீட்டு பார்க்க முடியாது.
இந்த தெரிவு ஆண்ட்ராய்டு 11 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்ட்ராய்டு பதிப்புகளில் மட்டுமே கிடைக்க கூடியதாக இருக்கும்.
Delete செய்யப்பட்ட செய்தியை பார்க்கும் முறை
முதலில் உங்கள் phone settings-க்கு சென்று, அதில் Notifications -ஐ ஆன் செய்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர், More Settings சென்று, Notifications History பார்த்தால், டெலிட் செய்யப்பட்ட செய்திகள் அதில் வரிசையாக காட்சியளிக்கும்.
வாட்ஸ்அப் குழு அல்லது தனிநபர்கள் அனுப்பிவிட்டு, டெலிட் செய்த அத்தனை செய்திகளையும் இங்கு மீட்டு படிக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |