நீங்க குண்டா இருக்கீங்களா? உயரமாகவும், ஒல்லியாகவும் தோற்றமளிக்க இப்படி ஆடை அணியலாம்
பொதுவாகவே அனைருக்கும் அழகாகவும் நேர்த்தியாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.குறிப்பாக பெண்கள் தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என அதிக முயற்ச்சிகளை எடுப்பார்கள்.
இருப்பினும் திருமணத்துக்கு பின்னர் பெரும்பாலான பெண்களின் உடல் எடை அதிரித்துவிடுவதால் தங்களுக்கு பிடித்த வகையில் ஆடை அணிய முடியவில்லை என மிகவும் கவலைப்படுகின்றனர்.
அந்தவகையில் குண்டாக இருக்கும் பெண்களும் உயரமாகவும் ஒல்லியாகவும் தெரிவதற்கு எவ்வாறான ஆடைகளை அணிய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
செங்குத்து கோடிட்ட ஆடைகள்
குண்டாக இருப்பவர்கள் செங்குத்தாக கோடிட்ட சட்டை அல்லது பேண்ட் அணிவதால் பார்ப்பவர்கள் கண்களுக்கு மேலிருந்து கீழாக ஒரு மாயைத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றது.
இதனால் நீங்கள் உயரமாகவும் மெலிதாகவும் தோற்றமளிக்க முடியும். பெரும்பாலும் ஆடைகளை தெரிவு செய்யும் போது செங்குத்து கோடுகள் இருக்கும் வகையில் தெரிவு செய்வது உங்களை நேர்த்தியாகவும் காட்டுவதற்கு உதவுகின்றது.
ஒரே நிறமுடைய ஆடை
ஒல்லியான தோற்றத்தை உருவாக்க ஒரே வண்ணமுடைய அல்லது டோனல் டிரஸ்ஸிங், சிறந்த வழயாக பார்க்கப்படுகின்றது.
மேலிருந்து கீழாக ஒரே நிறத்தைப் பயன்படுத்துவது,மற்றவர்களின் பார்வையில் ஒரு மாய தோற்றத்தை உருவாக்க சிறந்த வழயாக பார்க்கப்படுகின்றது.
அவ்வாறான ஆடைகளை தெரிவு செய்வது உயரமாகவும் மெலிதாகவும் தோற்றமளிக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
பேண்ட்டை உயர்த்தி போடுவது
குண்டாக இருப்பவர்கள் உடலின் கீழ் பகுதி ஆடையை இடுப்பிற்கு மேலே உயர்த்தி அணியும் போது பார்ப்பவர்களுக்கு, இடுப்பின் மெல்லிய பகுதியின் மீது தான் கவனம் இருக்கும் இதன் மூலம் நீங்கள் ஒல்லியாகவும் உயரமாகவும் தோற்றமளிக்கலாம்.
பெல்ட் அணிவது
குண்டாக இருக்கும் பெண்கள் இடுப்பின் மெல்லிய பகுதியில் பெல்ட் பயன்படுத்துவதனால் பாரி்ப்பவர்கள் உங்கள் உடலின் மிக மெல்லிய பகுதியில் கவனம் செலுத்துவதற்கு பெரிதும் உதவும்.
மேலும் உங்கள் கால்கள் நீளமாக இருக்கும், இதனால் நீங்கள் ஒல்லியாகவும், உயரமாகவும் இருப்பத போல் தோற்றமளிப்பீர்கள். இதிலும் அகலமான பெல்டை தெரிவு செய்யாமல் மிகவும் மெல்லிய பெல்ட்டை தெரிவு செய்வது உங்கள் தோற்றத்தை இன்னும் சிறப்பாக காட்டும்.
V- நெக்
குண்டாக இருப்பவர்கள் ஆடைகளின் கழுத்து பகுதியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் உயரமாக தோற்றமளிக்க v வடிவில் கழுத்து கொண்ட ஆடைகளை தெரிவு செய்வது உயரமாக தோற்றமளிக்க வைப்பதுடன், பருமனையும் குறைத்து, உங்களை மெலிதாகக் காட்ட உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |