அரிசி, பருப்பில் வண்டுகள், பூச்சிகள் வரவே கூடாதா? இதை மட்டும் செய்தால் போதும்
நமது வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் அரிசி, பருப்பு இவற்றில் ஏற்படும் பூச்சிகளை எவ்வாறு வராமல் தடுப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலான வீடுகளில் மாதம் ஒருமுறை தான் மளிகை பொருட்கள் வாங்குவார்கள். அவ்வாறு வாங்கி வைத்த அரிசி, பருப்பு, மாவு போன்றவற்றில் சிறு பூச்சிகள் அல்லது புழுக்கள் வருவதை அவதானித்திருப்போம்.
பெரும்பாலான வீடுகளில் மாதம் ஒருமுறை தான் மளிகை பொருட்கள் வாங்குவார்கள். அவ்வாறு வாங்கி வைத்த அரிசி, பருப்பு, மாவு போன்றவற்றில் சிறு பூச்சிகள் அல்லது புழுக்கள் வருவதை அவதானித்திருப்போம்.

இவை குறித்த தானியத்தில் இயல்பு தன்மையை நீக்கி, கீழே கொட்டும் அளவிற்கு வந்துவிடுகின்றது.
இதனை ஒவ்வொன்றாக எடுத்து அப்புறப்படுத்துவது என்பது சாத்தியமே இல்லாத செயலாகும். அந்த வகையில் எந்தவொரு கெமிக்கல் பயன்படுத்தாமல் இந்த பூச்சியினை எவ்வாறு அகற்றலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அரிசி, பருப்பில் இருக்கும் பூச்சிகளை விரட்ட
சுத்தமான துணி அல்லது பெரிய தட்டில் அரிசியினை கொட்டி சூரிய வெளிச்சத்தில் 2 அல்லது 3 மணி நேரம் வைக்கலாம். இவை அரிசியிலுள்ள ஈரப்பதத்தினை அகற்றுவதுடன், பூச்சிகளையும் அகற்றிவிடுகின்றது.
அரிசியில் வரும் பூச்சியினை உப்பைக் கொண்டும் விரட்டலாம். அதாவது அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தின் மேல்புறம் அல்லது அடிப்பகுதியில் உப்பை போடவும். இவை ஈரப்பதத்தினை உறிஞ்சி தானியங்களை பூச்சிகள் வராமல் பார்த்துக் கொள்கின்றது. சிறிதளவு அரிசியில் கல்லுப்பை தூவியும் வைக்கலாம்.

சிறிய கிண்ணம் ஒன்றில் வெள்ளை வினிகர் மற்றும் கால் டீஸ்பூன் பெருங்காயம் சேர்த்து அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் நடுவே வைக்க வேண்டும். கிண்ணத்திலுள்ள குறித்த கலவை மற்ற இடங்களுக்கு பரவி பூச்சிகள் வராமல் தடுக்கின்றது.
இயற்கையான வாசனை பூச்சிக் பிடிக்காது. ஆதலால் பிரியாணி இலையினை 2 அல்லது 3 எடுத்து அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு வைத்தால் பூச்சி தொல்லைகள் இருக்காது.
பூண்டு பற்களை 5 எடுத்துக்கொண்டு இதனை தோல் உரிக்காமல் அரிசி போட்டு வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராமல் இருக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |