கோடை வெப்பத்தினை தணிக்கும் பானகம்! முன்னோர்களின் இயற்கை பொக்கிஷம்
கோடைகால வெப்பத்தினை தணிக்கும் பாரம்பரிய பானகம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோடை வெயில்
கோடைக்காலத்தில் நீர்ச்சத்து இழப்பு அதிகமாக இருக்கும் என்பதால் உடலை நீரோட்டாக வைத்துக்கொள்ள மோர், இளநீர், தண்ணீர் சத்து நிறைந்த பழங்களை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் சூடு அதிகமாக இருப்பதால் தாகம், சோர்வு, வெப்ப காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். முன்னோர்கள் வெப்பத்தினை சமாளிப்பதற்கு பல பாரம்பரிய பானங்களை பருகி வந்தனர்.
அவற்றில் ஒன்றான பானகத்தை எவ்வாறு வீட்டில் எளிதாக தயார் செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதனை தயார் செய்யலாம். வெல்லம், தண்ணீர், எலுமிச்சை சாறு, சுக்குப்பொடி அல்லது இஞ்சித் தூள், ஏலக்காய் பொடி மற்றும் சிட்டிகை அளவு பச்சை கற்பூரம் இருந்தால் போதுமாம்.

எவ்வாறு தாயரிப்பது?
முதலில் வெல்லத்தினை தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். அதில் எலுமிச்சை சாறு மற்றும் சுக்குபொடி மற்றும் ஏலக்காய் பொடி இவற்றினை சேர்ந்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கடைசியாக பச்சை கற்பூரம் சேர்த்து, வடிகட்டி பருகினால் சுவையான இனிப்பு, புளிப்பு, சற்று காரத்தன்மையான பானகம் தயார்.

குறித்த பாகனமானது வெப்பத்தினை குறைப்பதுடன், உடனடி ஆற்றலையும் வழங்குகின்றது. ரத்தத்தினை சுத்தப்படுத்தவும் செய்கின்றது.
இதில் சேர்க்கப்படும் சுக்கு செரிமானத்தை மேம்படுத்தி வயிற்றுப்போக்கு பிரச்சனையை தடுக்கவும் செய்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |